News September 9, 2025
BREAKING: அனைத்து பள்ளிகளுக்கும் பறந்த உத்தரவு

தமிழகத்தில் சாதி (அ) வகுப்புவாத எண்ணத்தை மாணவர்களிடையே தூண்டும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. புகார்கள் உறுதியானால் சம்பந்தப்பட்ட ஆசிரியரை வேறு பள்ளிக்கு மாற்றவும் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அனைத்து பள்ளிகளிலும் ‘மகிழ் முற்றம்’ எனும் மாணவர் குழு அமைப்பை உருவாக்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.
Similar News
News March 18, 2026
BREAKING: அதிமுக கூட்டணியில் திருப்பம்..

அதிமுக கூட்டணியில் 30-40 இடங்கள் BJP கேட்டுவந்த நிலையில், அக்கட்சிக்கு 27 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், நாளை தமிழக BJP மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல் TN வருகிறார். அப்போது தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இறுதிசெய்யப்பட்டு, நாளை மறுநாள் உடன்படிக்கை கையெழுத்தாகும் என கூறப்படுகிறது. இதனிடையே, அதிமுக மூத்த நிர்வாகிகளுடன் EPS இன்று மாலை ஆலோசனை நடத்தவுள்ளாராம்.
News March 18, 2026
இந்தியாவுக்கு போங்க.. ₹2.40 லட்சம் தருகிறோம்: அமெரிக்கா

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள வெளிநாட்டவர்களை வெளியேற்றுவதற்கான நூதன திட்டம் ஒன்றை டிரம்ப் அரசு அறிவித்துள்ளது. தாங்களாகவே முன்வந்து வெளியேறும் நபர்களுக்கு கைது நடவடிக்கை, அபராதம் ரத்து செய்யப்படுவதோடு, நாடு திரும்ப இலவச விமான டிக்கெட், ஊக்கத்தொகை ₹2.40 லட்சம் வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான விவரங்களை SM-ல் DHM அமைச்சகம் தாஜ்மஹால் படத்துடன் பதிவிட்டுள்ளது.
News March 18, 2026
தேர்தல் தேதி மாற்றமா? திடீர் பரபரப்பு

புதுச்சேரி பேரவை தேர்தலை TN-ல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள ஏப்.23 அன்றே நடத்த கோரி ECI-க்கு புதுவை DMK கடிதம் அனுப்பியுள்ளது. இரு தேர்தல்களும் வெவ்வேறு நாள்களில் உள்ளதால், TN-ல் பணியாற்றும் புதுவையை சேர்ந்தோர் சிரமப்படுவர் என்றும் DMK குறிப்பிட்டுள்ளது. புதுவை பேரவையின் பதவிக்காலம் ஜூன் 15 வரை உள்ளபோதும், முன்கூட்டியே தேர்தல் நடத்துவதிலுள்ள அவசரம் குறித்து விளக்க வேண்டும் என்றும் DMK கேட்டுள்ளது.


