News September 9, 2025
கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (09.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News March 3, 2026
கோவை: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000 உண்டு!

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் <
News March 3, 2026
கோவை தெற்கு தொகுதியில் இவரா?

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவையின் மிக முக்கியத் தொகுதியாகக் கருதப்படும் கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிட விருப்பம் தெரிவித்து, அக்கட்சியின் மாணவர் அணி செயலாளர் ராஜீவ்காந்தி இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் விருப்பமனு தாக்கல் செய்தார். இத்தொகுதியில் கடந்த முறை பாஜக சார்பில் போட்டியிட்டு வானதி சீனிவாசன் வெற்றி பெற்ற தொகுதியாகும்.
News March 3, 2026
சூலூர் அருகே ஆண் சடலம்!

சூலூர் குளத்தின் அருகே உள்ள விவசாய தோட்டத்தில் உள்ள கிணற்றில் ஒரு ஆண் சடலம் மிதப்பதாக சூலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கிணற்றில் மிதந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


