News September 9, 2025
நன்றி.. நன்றி.. முற்றுப்புள்ளி வைத்தார் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், BJP கூட்டணி வெற்றியடைய வேண்டும் என அமித்ஷாவிடம் கூறியதாக தெரிவித்துள்ளார். அதிமுக வலிமை பெற வேண்டும் என்பதுதான் எனது நோக்கம் என்று கூறினார். அப்போது, EPS, கட்சி நடவடிக்கை குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை செய்தியாளர்கள் எழுப்பினர். அதற்கு, நன்றி.. நன்றி.. என கையெடுத்து கும்பிட்டு, சர்ச்சை கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் காரில் வேகமாக சென்றார்.
Similar News
News March 28, 2026
வேண்டுமென்றே திட்டமிட்டு தடை: நிர்மல் குமார்

தவெகவுக்கு வேண்டுமென்றே திட்டமிட்டு அனுமதி மறுக்கப்படுவதாக CTR நிர்மல் குமார் குற்றம்சாட்டியுள்ளார். செயலி மூலம் அனுமதி கோரினால், கேட்கப்பட்ட நேரம் கடந்த பின்னர் அனுமதி தருவதாக சாடினார். பெரும்பாலான அதிகாரிகள் திமுக கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், தமிழகம் முழுவதும் தங்களது நிர்வாகிகளுக்கு அனுமதி கிடைக்கவில்லை என்றார். மேலும், திமுகவுக்கு சாதகமான அதிகாரிகளை மாற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.
News March 28, 2026
படிக்காதவர்களுக்கும் அரசு வேலை: சீமான்

நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால் படிக்காதவருக்கும் அரசு வேலை வழங்கப்படும் என்று சீமான் கூறியுள்ளார். திருவண்ணாமலையில் தேர்தல் பிரசாரத்தின்போது, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் வேலைவாய்ப்பு & வருவாயை உயர்த்துவதாக தெரிவித்தார். நிலமும் வளமும் சார்ந்த தொழிற்சாலைகளை கொண்டுவந்து அனைவருக்கும் அரசு வேலை தருவோம் என்று கூறினார். மேலும், படிக்காதவர்களே இல்லை என்ற நிலையை உருவாக்குவோம் என்றார். <<-se>>#TNELECTION2026<<>>
News March 28, 2026
தவெகவுடன் கூட்டணி.. முடிவை கூறினார்

அதிமுகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் புதிய தமிழகம் கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. இந்நிலையில் NDA-க்கும் தங்களுக்கும் எந்த ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்றும், தவெக அணுகினால் அவர்களுடனான கூட்டணி குறித்து சிந்திப்போம் எனவும் அக்கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். மேலும், தென் தமிழகத்தில் 50-60 தொகுதிகளில் அதிமுக டெபாசிட் கூட பெறாது என்றும் தெரிவித்தார்.


