News September 9, 2025

ஆலப்பாக்கம் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியம், ஆலப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் “நடுவுல கொஞ்சம் கற்றலைத் தேடி” திட்டத்தில் வகுப்புகள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று (09.09.2025) பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவருடன் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

Similar News

News March 14, 2026

குடிமைப் பணிகள் தேர்வு -2 ,ஆட்சியர் அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில்
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – II பதவிகளுக்கான முதன்மை எழுத்துத் தேர்வுகள் 15.03.2026 அன்று நடைபெறவுள்ளது என
மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார்
தெரிவித்துள்ளார். தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் நடைபெறும் இந்த தேர்வில் காலையில் 315 பேரும், மாலையில் 322 பேரும் எழுத உள்ளனர்.
ஹால் டிக்கெட் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

News March 14, 2026

கடலூர்: சிறுமி கர்ப்பம்; இளைஞர் மீது வழக்கு!

image

நெல்லிக்குப்பம் அடுத்த வாழப்பட்டை சேர்ந்தவர் கவிபாரதி (30). இவர் 17 வயதுடைய சிறுமியை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தினார். இதில் சிறுமி கர்ப்பமானார். பின்னர் பரிசோதனை செய்ய கடலூர் அரசு மருத்துவமனை சென்ற போது, அங்கிருந்த மருத்துவர்கள் புகார் அளித்தனர். அதன் பேரில் பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசார் நேற்று போக்சோ சட்டத்தில் கவிபாரதி மீது வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.

News March 14, 2026

கடலூர்: டிராக்டர் மோதி இளம்பெண் பலி

image

பண்ருட்டி அடுத்த திருத்துறையூர் அரசு பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணிபுரிபவர் சௌந்தரி (35). இவர், உடன் பணி புரியும் கண்டரகோட்டையை சேர்ந்த சிவசங்கரியுடன் (36) நேற்று ஸ்கூட்டரில் சென்றபோது, கரும்பு ஏற்றிசென்ற டிராக்டர் மோதி சௌந்தரி உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த சிவசங்கரி பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!