News April 11, 2024
இந்தியா வர நாள் குறித்த எலான் மஸ்க்

எலான் மஸ்க் விரைவில் இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக பணக்காரரும், X வலைதளத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க் வருகிற ஏப்ரல் 22இல் இந்தியா வர உள்ளார். இந்த வருகையின் போது பிரதமர் மோடியை அவர் சந்தித்து பேச உள்ளார். இது தொடர்பாக X-இல் பதிவிட்டுள்ள எலான் மஸ்க், “இந்தியாவில் பிரதமர் மோடியுடனான சந்திப்பை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
Similar News
News August 11, 2025
ஆண்டில் 300 நாள்கள் தூங்கும் மனிதர்

நல்ல தூக்கத்துக்காக பலர் ஏங்க, ராஜஸ்தானை சேர்ந்த புர்க்காராமுக்கு (46) தூக்கமே சாபமாகிவிட்டது. தன் 23-வது வயது முதல் ‘ஆக்சிஸ் ஹைப்பர்சோம்னியா’ என்ற அரிய நோயால் பாதிக்கப்பட்ட இவரால், ஒரு மாதத்தில் 5 நாள்கள் மட்டுமே விழித்திருக்க முடிகிறது. மீதி 25 நாள்கள் தொடர்ச்சியான தூக்கத்தில் கழிகிறது. இவர் தூக்கத்தில் இருக்கையில், குடும்பத்தினரே அவருக்கு உணவூட்டுவது, குளிக்க வைப்பது ஆகியவற்றை செய்கின்றனர்.
News August 11, 2025
ஆக. 21ல் தவெக மாநாடு நடப்பது உறுதி

தவெகவின் 2-வது மாநாட்டை ஆக.25-ம் தேதி மதுரையில் நடத்த விஜய் திட்டமிட்டிருந்தார். ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக (விநாயகர் சதுர்த்தி) அன்றைய தேதியில் போலீஸ் அனுமதி கிடைப்பதில் சிக்கல் எழுந்தது. இதனால் மாநாட்டு தேதியை மாற்றுமாறு போலீஸ் அறிவுறுத்தியது. இதனையடுத்து, ஆக. 21-ல் மாநாடு நடத்தப்படும் என விஜய் அறிவித்தார். அன்றைய தினத்தில் மாநாட்டை நடத்திக் கொள்ள தற்போது போலீஸ் அனுமதி வழங்கியுள்ளது.
News August 11, 2025
FLASH: நடிகை மீரா மிதுன் மனநல ஹாஸ்பிடலில் அனுமதி

மன அழுத்தம் காரணமாக நடிகை மீரா மிதுன் டெல்லியில் உள்ள மனநல ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 2021-ல் பட்டியல் சமூக மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த மீரா மிதுன் கடந்த 4-ம் தேதி கைது செய்யப்பட்டார். அவரை இன்று நேரில் ஆஜர்படுத்த உத்தரவிடப்பட்ட நிலையில், கோர்ட்டில் சென்னை குற்றப்பிரிவு போலீசார் இந்த தகவலை கூறியுள்ளனர்.