News September 9, 2025

சேலத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

image

அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக சேலம் மாவட்டத்தில் இன்று (செப்.09) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சேலத்தில் நேற்றிரவு பரவலாக மழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News March 3, 2026

ஆத்தூரில் திமுக பேனர் கிழித்ததால் பரபரப்பு

image

ஆத்தூர் ஒன்றியம் செல்லியம்பாளையத்தில், முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு வைக்கப்பட்டிருந்த பேனரை மர்ம நபர்கள் கிழித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் பத்திரம் மனோகரன் தரப்பில் வைக்கப்பட்ட இப்பேனர் சிதைக்கப்பட்டதைக் கண்டித்து, திமுக நிர்வாகிகள் ஆத்தூர் ஊரக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

News March 3, 2026

சேலம்: பட்டாவில் பெயர் திருத்தம் செய்யனுமா?

image

சேலம் மக்களே, பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.

News March 3, 2026

சேலம்: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000 உண்டு

image

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் <>இங்கே கிளிக்<<>> செய்து பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!