News September 9, 2025
காஞ்சியில் திமுக நிர்வாகிகளை சந்திக்கும் துணை முதல்வர்!

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் சட்டமன்ற தொகுதி வாரியாக திமுக ஒன்றிய, நகர, கிளைக்கழக மற்றும் பாக முகவர்களை சந்திக்க உள்ளார். இந்த நிலையில் இன்று (செப்.,8) காஞ்சிபுரத்தில் இருந்து தனது பயணத்தைத் தொடங்குகிறார். இதனை தொடர்ந்து நாளை காலை செங்கல்பட்டு மாவட்டத்திற்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் செல்கிறார்.
Similar News
News September 9, 2025
காஞ்சியில் நூலகத்தை திறந்து வைத்த துணை முதல்வர்

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் ஏகாம்பரநாதர் சன்னதி தெரு பகுதியில் நூலகம் அமைக்கப்பட்டிருந்தது. குளிர்சாதன வசதியுடன் கூடிய நூலகத்தை தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்த வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்வின்போது அமைச்சர்கள் ஆர் காந்தி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் சுந்தர், சிவிஎம்பி எழிலரசன், மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
News September 9, 2025
துணை முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா இல்லம் வருகை

காஞ்சிபுரம் வருகை தந்த தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள பேரறிஞர் அண்ணாதுரை இல்லத்திற்கு வருகை புரிந்தார். அங்கிருந்த அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி, வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் ஆகியோர் இருந்தனர்.
News September 9, 2025
காஞ்சியில் இலவச பட்டாக்களை வழங்கிய துணை முதல்வர்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (9.9.2025) நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டாக்களை வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, சட்டமன்ற உறுப்பினர்கள் க.சுந்தர், எழிலரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.