News September 9, 2025
மறைமலை நகரில் உயிர் நண்பன் மீது கொலை வெறி தாக்குதல்

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில், மதுபோதையில் ஏற்பட்ட தகராறில், தீர்த்தகிரி என்ற இளைஞர் தனது உயிர் நண்பரான தயாநிதியை சுத்தியலால் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த தயாநிதி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவத்தையடுத்து போலீசார் தீர்த்தகிரியை கைது செய்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News March 8, 2026
செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று (மார்ச்.07) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News March 7, 2026
செங்கை: சனி தோஷம் நீக்கும் அற்புத கோவில்

பல்லாவரம் அருகே உள்ள பொழிச்சலூரில் அருள்மிகு ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு அகத்தியருக்கு, சிவன் சுயம்புவாக தோன்றி காட்சியளித்ததாகவும், சனீஸ்வர பகவானே இத்தல இறைவனை வழிபட்டதாகவும் கூறப்படுகிறது. ஏழரைச் சனி, பாதச் சனி, அஷ்டமச் சனி, அர்த்தாஷ்டமச் சனி, கண்டகச் சனி என எந்த வகையான தோஷமாக இருந்தாலும், இங்கு வழிபட்டால் நிவர்த்தியடையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. ஷேர் பண்ணுங்க.
News March 7, 2026
பட்ஜெட் நிதியில் 30% கொள்ளை – விஜய்

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் பேசிய விஜய், “தமிழக பட்ஜெட்டுக்கான நிதியில் 30% முதலமைச்சருக்காக ஒதுக்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும் “காசில்லை காசில்லை என்று கூறிவிட்டு விடியற்காலையில் ரூ.5,000 மக்களுக்கு வழங்கியது எப்படி? ஸ்டாலின் சார் Tax-ஐ ஒழித்தாலே மக்களுக்கு பணத்தை வழங்க முடியும்” என்றார். விஜய்யின் இந்த குற்றசாட்டை நீங்க எப்படி நினைக்கிறீங்க?


