News September 9, 2025
BREAKING: முடிவை அறிவித்தார் செங்கோட்டையன்

டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து பேசியதாக செங்கோட்டையன் ஒப்புக்கொண்டுள்ளார். மக்கள் நலனுக்காகவும், இயக்கம் (ADMK) வலுபெறவும் தொடர்ந்து பணியாற்றுவேன் என்று அறிவித்துள்ளார். மேலும், அமித்ஷா உடன் ‘தனது அரசியல் நிலைபாடு & தற்போதைய தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், அனைவரும் ஒன்றிணைய வேண்டும்; இயக்கம் வலுப்பெற வேண்டுமென கருத்துகளை முன்வைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 8, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: இடுக்கணழியாமை ▶குறள் எண்: 626 ▶குறள்: அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்று ஓம்புதல் தேற்றா தவர். ▶பொருள்: இத்தனை வளத்தையும் பெற்றுள்ளோமே யென்று மகிழ்ந்து அதைக் காத்திட வேண்டுமென்று கருதாதவர்கள் அந்த வளத்தை இழக்க நேரிடும் போது மட்டும் அதற்காகத் துவண்டு போய் விடுவார்களா?.
News March 8, 2026
ஜனாதிபதிக்கு நேர்ந்தது வெட்கக்கேடானது: PM மோடி

மேற்கு வங்கத்திற்கு சென்ற ஜனாதிபதி திரெளபதி முர்முவை அம்மாநில CM மம்தா பானர்ஜி நேரில் வரவேற்காததை வெட்கக்கேடானது என PM மோடி சாடியுள்ளார். பழங்குடியை சேர்ந்த முர்மு வெளிப்படுத்திய வலி மற்றும் வேதனை, இந்திய மக்களின் மனதில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது; TMC அரசு அனைத்து வரம்புகளையும் தாண்டிவிட்டது என்றும், ஜனாதிபதிக்கு ஏற்பட்ட இந்த அவமானத்திற்கு TMC-ன் நிர்வாகமே காரணம் எனவும் விமர்சித்துள்ளார்.
News March 8, 2026
SPORTS 360°: பைனலுக்கு முன்னேறினார் லக்ஷயா சென்

*ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டனில் இந்தியாவின் லக்ஷயா சென் பைனலுக்கு முன்னேறினார். *AFC மகளிர் ஆசியக் கோப்பையின் லீக் போட்டியில் இந்தியாவை 0-11 என்ற கணக்கில் ஜப்பான் வீழ்த்தியது. *காயம் காரணமாக ஆஸ்திரேலிய ஜிபி ஃபார்முலா 1 தொடரில் இருந்து வெர்ஸ்டப்பன் விலகினார். *ஹாக்கி மகளிர் உலகக்கோப்பைக்கு தகுதி பெறும் கடைசி வாய்ப்பாக இந்திய அணி உருகுவேவை எதிர்கொள்கிறது.


