News September 9, 2025

தமிழ் சினிமாவும் ₹1000 கோடி வசூலும்..SK சொன்ன பாய்ண்ட்

image

தமிழ் சினிமாவுக்கு ₹1,000 கோடி வசூல் கனவாக இருக்கும் நிலையில், அது குறித்து SK சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். தமிழில் பான் இந்தியாவுக்கான சரியான ஸ்கிரிப்ட் இல்லை என்றும், மும்பை, பெங்களூரு போல டிக்கெட் விலை இருக்க வேண்டும் என குறிப்பிட்டார். ஆனால், டிக்கெட் விலையை உயர்த்த வேண்டும் என தான் கூறவில்லை என்று விளக்கமளித்தவர் ஹிந்தி மார்க்கெட்டை பிடிப்பது அவசியம் என சுட்டிக்காட்டினார்.

Similar News

News March 27, 2026

விஜய்க்கு அனுமதி மறுக்கப்படவில்லை

image

சென்னையில் விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுக்கப்படவில்லை என மாநகராட்சி ஆணையர் விளக்கமளித்துள்ளார். காகிதத்தில் எழுதி கொடுத்து அனுமதி கேட்டால் அனுமதி தரமுடியாது; ECI-ன் நிபந்தனைகள், விதிகளுக்கு உட்பட்டு சுவிதா இணையதளம் மூலம் முறையாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தின் அடிப்படையில் காவல்துறை ஆய்வு செய்து ஒப்புதல் வழங்கப்பட்ட பின் அனுமதி அளிக்கப்படும் என தெரிவித்தார் <<-se>>#TNElection2026<<>>

News March 27, 2026

அதிமுகவில் இணைந்தார்.. ஸ்டாலின் அதிர்ச்சி

image

தமிழக தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்துவரும் நிலையில், முக்கிய நிர்வாகிகள் பலர் மாற்றுக் கட்சியில் இணைந்து வருகின்றனர். அந்தவகையில், OPS ஆதரவாளரும், கிருஷ்ணகிரி Ex MLA-வுமான கோவிந்தராஜ், EPS முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இது திமுகவில் இணைந்துள்ள OPS மூலம், அவரது ஆதரவாளர்களையும் கட்சியில் இணைக்க எண்ணியிருந்த ஸ்டாலினுக்கு சற்று அதிர்ச்சியை கொடுத்துள்ளதாம்.

News March 27, 2026

IPL டீம் கேப்டன்களின் பரிதாப நிலை!

image

உலகின் தலைசிறந்த வீரர்களை உள்ளடக்கிய IPL டீம் கேப்டன்களை கவனியுங்க. 10-ல் 7 பேருக்கு இந்திய T20I அணியில் இடமே இல்லை. CSK கேப்டன் ருதுராஜ், RCB கேப்டன் படிதர், PBKS கேப்டன் ஷ்ரேயஸ், GT கேப்டன் கில், KKR கேப்டன் ரஹானே, RR கேப்டன் பராக், LSG கேப்டன் பண்ட் ஆகியோர் சிறந்த T20 வீரர்கள் இல்லை என BCCI கருதுகிறதா? அல்லது வேறெதும் காரணம் உள்ளதா? என்ற விவாதம் SM-ல் தொடங்கியுள்ளது. நீங்க என்ன நினைக்கிறீங்க?

error: Content is protected !!