News September 9, 2025
ஓசூருக்கு வரும் முதலமைச்சர்: 2,000 போலீசார் பாதுகாப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூருக்கு, வருகிற செப்.11. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகை தர உள்ளார். 2 நாள் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வரும் அவர், முதலமைச்சர் வருகையையொட்டி, தர்மபுரி, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களிலிருந்து 2,000 போலீசார் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துச் சீரமைப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.
Similar News
News September 10, 2025
ஐ லவ் நம்ம கிருஷ்ணகிரி திறப்பு

கிருஷ்ணகிரி நகராட்சி சார்பில் ராயக்கோட்டை மேம்பாலம் மற்றும் திருவண்ணாமலை பிரிவு சாலை ஆகிய இடங்களில் ஐ லவ் நம்ம கிருஷ்ணகிரி என்ற டிஜிட்டல் பலகையை நகராட்சி சார்பில் நிறுவப்பட்டுள்ளது. அந்த பலகையை பொறுப்பு அமைச்சர் சக்கரபாணி திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் திமுக கிழக்கு மாவட்ட கழக செயலாளர் மதியழகன், சேர்மேன் பரிதா நவாப், நகர செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
News September 9, 2025
கிருஷ்ணகிரி மாவட்ட இரவு நேர ரோந்து பணி விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (09.09.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணி அதிகாரிகள் தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் மற்றும் பெரியவர்கள் முதியவர்கள் ஏதேனும் ஆபத்து நேரிட்டால் உடனடியாக தொடர்பு கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட கண்காணிப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.
News September 9, 2025
முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி

மாவட்டங்கள் தோறும் முதலமைச்சர் கோப்பை காண விளையாட்டு போட்டி நடைபெற்று கொண்டு வருகின்றது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பை காண விளையாட்டு போட்டி கிருஷ்ணகிரியில் உள்ள எஸ்டிஏடி விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள பல்வேறு பள்ளிகளில் இருந்து மாணவர்கள் வருகை தந்துள்ளனர்.