News September 9, 2025
கடலூர்: மின்னல் தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு

காட்டுமன்னார்கோவில் அடுத்த டி.மணலூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி ரகோத்தமன் இவர் நேற்று முன்தினம் அருகில் உள்ள டி.நெடுஞ்சேரியில் மேச்சலுக்கு சென்ற மாடுகள் வராததால் அதனைத் தேடி வயலுக்கு சென்ற நிலையில் திடீரென பெய்த மழையில் அப்போது மின்னல் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து புகாரின் பேரில் புத்தூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News March 5, 2026
கடலூர்: ரூ.50,500 சம்பளத்தில் அரசு வேலை

மத்திய ஆயுதக் காவல் படையில் காலியாக உள்ள Assistant Commandants பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 349
3. வயது: 20 – 25
4. சம்பளம்: ரூ.56,100 – ரூ.2,25,100
5. கல்வித்தகுதி: டிகிரி போதும்
6. கடைசி தேதி: 12.03.2026
7. விண்ணப்பிக்க: <
8. மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News March 5, 2026
கடலூர்: மெடிக்கலில் மாத்திரை வாங்குவோர் கவனத்திற்கு!

சமீப காலங்களில் காலாவதியான & தவறான மருந்துகள் காரணமாக உயிரிழப்புகளும், பக்கவிளைவுகளும் ஏற்படுகிறது. நீங்கள் பயன்படுத்திய மருந்தினால் ஆபத்து இருப்பதாக உணர்ந்தால், தாமதிக்காமல் 1800-180-3024 என்ற எண்ணில் புகார் செய்யவும். இந்த புகாரின் மூலம், குறிப்பிட்ட மருந்து ஆய்வு செய்யப்பட்டு, குறைபாடு இருப்பின் அந்த மருந்து தடை செய்யப்படும் (அ) அபராதம் விதிக்கப்படும். ஷேர் பண்ணி விழிப்புணர்வு ஏற்படுத்துங்க!
News March 5, 2026
கடலூர்: தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு

2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு அளிப்பதாக அகில இந்திய சித்த வைத்திய சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை, சிதம்பரம் எம்எல்ஏ பாண்டியன் முன்னிலையில் நேற்று (மார்ச் 4) நேரில் சந்தித்த சங்க நிர்வாகிகள் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு தெரிவிப்பதாக உறுதியளித்தனர்.


