News September 9, 2025
குற்றாலநாதர் கோவிலுக்குள் வர அனுமதி இல்லை

குற்றாலம் பேரூராட்சிக்குட்பட்ட மெயின் அருவி கரை பகுதியில் பிரசித்தி பெற்ற
திரு குற்றாலநாதர் திருக்கோவிலில் கோவில் நிர்வாகம் சார்பில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஈரத்துணி, கைலி, நைட்டி, அரைக்கால் டவுசர் அணிந்து வர அனுமதி இல்லை மது அருந்திவிட்டு உள்ளே வரக்கூடாது. புகைப்படம் எடுக்கக் கூடாது என திருக்கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 10, 2025
தென்காசி: வைரலாகும் புகைப்படங்களால் பரபரப்பு

தென்காசி மாவட்டம், உலக பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமாக விளங்கும் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்கள் சீசன் காலமாகும். தற்பொழுது மழையின் காரணமாக தொடர்ந்து அருவிகளில் நீர்வரத்து வருகின்ற கொட்டி வருகிறது. இந்நிலையில் பிரதான அருவியில் மது பிரியர் ஒருவர் மது பாட்டிலை திறந்து வைத்துக் கொண்டு அருவியில் தண்ணீர் பிடிக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
News September 10, 2025
தென்காசி: தீபாவளி பட்டாசு விற்பனை உரிமம் பெற அழைப்பு

தென்காசி மாவட்டத்தில் தீபாவளிப் பண்டிகையையொட்டி வெடிபொருள் விதிகள் 2008இன் கீழ் தற்காலிகமாக பட்டாசுகள் வாங்கி விற்பனை செய்ய விரும்பும் விற்பனையாளர்கள் மற்றும் வணிகர்கள் தற்காலிக உரிமம் பெற 10.10.2025 வரை (https//www.tnesevai.tn.gov.in) இ-சேவை மையங்கள் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வழிவகை ஏற்படுத்தப்பட்டு உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தகவல் தெரிவித்துள்ளார். *ஷேர்
News September 10, 2025
தென்காசி: நகைக்காக பெண் கொலை; அதிரடி தீர்ப்பு

புளியங்குடி அருகே கடந்த 2013ஆம் ஆண்டு நகைக்காக இளம் பெண்ணை வெட்டி கொலை செய்து சாக்கு முட்டையில் வைத்து வீசி சென்ற சங்கரன்கோவில் அருகே உள்ள குருக்கள்பட்டி பகுதியைச் சேர்ந்த மணிகண்ட ராஜா என்பருக்கு தென்காசி மாவட்ட உரிமை நீதிமன்ற நீதிபதி ராஜவேலு ஆயுள் தண்டனையும் ரூ.3000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். வழக்கில் அரசு வழக்கறிஞர் குட்டி (எ) மருதப்பன் ஆஜராகினார்.