News September 9, 2025
நாகை: தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்ய அறிவுறுத்தல்

நாகை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் உளுந்து, பருத்தி மற்றும் நெற்பயிர்களுக்கு மாற்றுப் பயிராக தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்தால் கூடுதல் லாபம் ஈட்டலாம் . குறிப்பாக மாநில வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 100 சதவிகித மானியத்தில் வழங்கப்படும் மல்லிகைப்பூ உள்ளிட்ட பூச்செடிகளை விவசாயிகள் பெற்று சாகுபடியில் ஈடுபடும் போது நிறைந்த லாபம் அடையலாம் என நாகை மாவட்ட வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News September 9, 2025
நாகை: ஆசிரியர் தேர்வுக்கு நாளை கடைசி நாள்!

நாகை மக்களே, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (TET) விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க நேற்று (செப்.8) இறுதி நாளாக இருந்த நிலையில், நாளை (செப்.10) வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பிக்கத் தவறியவர்கள், உடனே<
News September 9, 2025
நாகை: ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி

நாகை செம்மட்டி பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுதன் (18). டீ கடை தொழிலாளியான இவர் சம்பவதன்று கீழ்வேளுர் அருகே மேல ஒதியத்தூர் பகுதியில் உள்ள ஒடம்போக்கி ஆற்றில் குளித்து கொண்டிருந்தார். அப்போது தண்ணீரில் ஏற்பட்ட சுழற்சியில் முழ்கி பரிதாபமாக உயிரிழந்தார் என கூறப்படுகிறது. இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News September 9, 2025
நாகை: கல்விக் கடன் வழங்கும் முகாம்

நாகை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி ஆகியவற்றின் சார்பில் கல்விக் கடன் வழங்குவதற்கான சிறப்பு முகாம் தலைஞாயிறு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வருகின்ற 11-ம் தேதி காலை 10:30 நடக்கிறது. இதில் கல்விச் சான்று, சேர்க்கை சான்று, ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களுடன் தங்கள் பெற்றோரையும் அழைத்து வந்து பயன்பெறுமாறு ஆட்சியர் ஆகாஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.