News April 11, 2024
பிரதமர் மோடியின் ரோடு ஷோவில் விதிமீறல்

சென்னை தியாகராய நகரில் நேற்று நடைபெற்ற பிரதமர் மோடியின் வாகனப் பேரணியில் விதிமீறல் நடைபெற்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழிசைக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க பிரதமர் மோடி நேற்று வாகனப் பேரணி நடத்தினார். அதில், தேர்தல் விதிமுறைகளை மீறி சாலைகளில் விளம்பர பதாகைகளை வைத்ததாக மாம்பலம் மற்றும் பாண்டி பஜார் காவல் நிலையங்களில் தேர்தல் அதிகாரிகள் புகாரின் பேரில் வழக்கு பதியப்பட்டுள்ளது.
Similar News
News January 20, 2026
புதுவையில் 3 மாத்திரைகளுக்கு தடை!

குடல் சிகிச்சைக்காக வழங்கப்படும் 3 மாத்திரைகள் தரமற்றவை என கருதி புதுச்சேரி அரசு தடை செய்துள்ளது. இமாச்சலில் தயாரிக்கப்பட்ட மாக்பான்சோ 40 மாத்திரை, கேரளாவின் பெபாவிட் பாராசிட்டமல் 650mg, ராஜஸ்தானின் சங்காவதி 5g ஆகிய மாத்திரைகள் தடை செய்யப்பட்டுள்ளன. இவற்றை இனி விற்பனை செய்யக்கூடாது என்றும், இருப்பில் உள்ள மாத்திரைகளை அந்த நிறுவனங்களுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
News January 20, 2026
கவர்னர் உரையே இனி இருக்காதா?

சட்டப்பேரவையில் இருந்து 4-வது ஆண்டாக கவர்னர் வெளியேறியது பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்நிலையில், ஆண்டின் தொடக்கத்தில் கவர்னர் உரை வாசிப்பு என்ற நடைமுறையை நீக்க அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய முயற்சி எடுக்கப்படும் என CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்தியா முழுவதும் இது அமலுக்கு வர வலியுறுத்தப்படும் எனவும் கூறியுள்ளார்.
News January 20, 2026
உள்கட்சி அதிருப்தி.. செங்கோட்டையனுக்கு அதிர்ச்சி

தவெகவில் புஸ்ஸி ஆனந்த் அளவிற்கு முக்கியத்துவம் வழங்காததால் செங்கோட்டையன் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. தவெக பிரசார குழுவில் KAS-க்கு 3-ம் இடம் வழங்கப்பட்டிருப்பது, தனது தொகுதி மா.செ.விடம் பேச ஆனந்தின் அனுமதி பெறவேண்டிய நிலை, CBI விவகாரத்தில் கருத்தை கேட்காதது, தான் அழைத்து வந்தவர்களுக்கு பதவிகள் வழங்கவில்லை என பல விஷயங்களில் KAS அதிருப்தியில் இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.


