News April 10, 2024
துபாய் கோயிலில் முன்பதிவு முறை அறிமுகம்

துபாயில் புதிதாக கட்டியுள்ள கோயிலில், பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் குவிந்து வருவதால் முன்பதிவு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி திறந்து வைத்த இந்தக் கோயிலில் மார்ச் 1 முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அப்போதிலிருந்து கூட்டம் அதிகரித்து வருவதால், அதனை தவிர்க்க https://www.mandir.ae/visit என்ற இணையதளம் மூலம் தரிசன நேரத்தை முன்கூட்டியே பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 21, 2026
Assembly: மறைந்தவர்களுக்கு இரங்கல் வாசிப்பு

2-ம் நாள் சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. 2025-ல் உயிரிழந்த முன்னாள் MLA-க்கள் சா.பன்னீர்செல்வம், எல்.கணேசன் , MLA பொன்னுசாமி, மக்களவை முன்னாள் தலைவர் சிவராஜ் பாட்டில், ஈரோடு தமிழன்பன், ஏவிஎம்.சரவணன், தொழிலதிபர் அருணாச்சலம் முருகானந்தத்துக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இவர்களின் இறப்புக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதாக கூறிய அப்பாவு, இரங்கல் தீர்மானத்தை நிறைவேற்றினார்.
News January 21, 2026
BREAKING: தங்கம் விலை வரலாறு காணாத மாற்றம்

தங்கம் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ₹3,600 வரை அதிகரித்து ஷாக் கொடுத்த நிலையில், இன்றும் விலை அதிகரித்து வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹350 அதிகரித்து ₹14,250-க்கும், சவரனுக்கு ₹2,800 உயர்ந்து ₹1,14,000-க்கும் விற்பனையாகிறது. இந்த 2 நாள்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ₹6,400 அதிகரித்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
News January 21, 2026
ராகுல் காந்தியை சந்திக்கிறாரா கனிமொழி?

திமுக – காங்கிரஸ் கூட்டணி மதில் மேல் பூனை போல தடுமாறி வருகிறது. இந்நிலையில், இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த திமுக பொருளாளர் டிஆர் பாலு, துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி ஆகியோர் ராகுல் காந்தி மற்றும் KC வேணுகோபாலை டெல்லியில் சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பில் அதிக தொகுதிகளை காங்கிரஸுக்கு ஒதுக்குவது குறித்து KC வேணுகோபால் பேசலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


