News September 9, 2025
கோவை: நண்பனை குத்தியவருக்கு போலீஸ் வலை!

கோவை நல்லம்பாளையத்தை சேர்ந்தவர் சிவப்பிரகாசம். மணியக்காரன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணி. இருவரும் நண்பர்கள். இந்நிலையில் மணிக்கு திருமணமான பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் சிவப்பிரகாசம் மணியை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணி மணியக்காரன்பாளையம் பகுதி பேக்கரியில் நின்றிருந்த சிவப்பிரகாசத்தை கத்தியால் குத்தியுள்ளார். சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து மணியை தேடி வருகின்றனர்.
Similar News
News September 9, 2025
கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (09.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 9, 2025
கோவை: கனரா வங்கியில் பயிற்சி.. மாதம் ரூ.22,000!

கோவை மக்களே, கனரா வங்கியின் கீழ் செயல்படும் கனரா வங்கி செக்யூரிட்டீஸ் பிரிவில் காலியாக உள்ள டிரைய்னி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். பயிற்சி பெறும் நபர்களுக்கு மாதம் ரூ.22,000 உதவித்தொகை வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News September 9, 2025
கோவைக்கு வரும் தவெக விஜய்!

தமிழகத்திலுள்ள 234 சட்டப்ரேவை தொகுதிகளுக்கு 2026ல் நடக்கிறது. இதையொட்டி பல்வேறு கட்சியினர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், தமிழக வெற்றிக்கழக தலைவரும் நடிகருமான விஜய் வரும்.13ம் தேதி முதல் டிசம்பர் 20ம் தேதி வரை தமிழகத்தில் பிரச்சாரம் செய்கிறார். இதையொட்டி கோவைக்கு அடுத்த மாதம் அக்.4ம் தேதி சனியன்று வந்து, மக்களிடம் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார் என தவெக அறிவிப்பு.