News September 9, 2025

தி.மலையில் மக்கள் குறைதீா் கூட்டம்.

image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் (செப்.08) நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் இருந்து 566 மனுக்கள் வரப்பெற்றன. கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ், மனுக்களைப் பெற்று சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம்
வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். மேலும், நிலுவையில் உள்ள மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

Similar News

News September 10, 2025

தி.மலை: அனைத்துத் துறை அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு

image

திருவண்ணாமலையில் பழங்குடியின மக்களுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நேற்று துவங்கப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் அரசு அலுவலர்கள், துறையை சார்ந்த அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

News September 9, 2025

தி.மலை:குளங்கள் ஆக்கிரமிப்பு அகற்றுதல் குறித்து ஆய்வுக்கூட்டம்

image

உயர்நீதிமன்ற நீதிபதி எம்.கோவிந்தராஜ் (ஓய்வு) தலைமையில் கலெக்டர் க.தர்ப்பகராஜ், முன்னிலையில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கிரிவலப்பாதையில் மலை மற்றும் குளங்களின் ஆக்கிரமிப்பு அகற்றுதல் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் இராம்பிரதீபன், வருவாய்த்துறையினர், வனத்துறையினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News September 9, 2025

தி.மலையில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (செப்.,9) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!