News September 9, 2025

அரியலூர்: மின்சார பிரச்சனையா? இதோ தீர்வு!

image

அரியலூர் மக்களே சமீப காலமாக மிஞ்சாரம் பாய்ந்து அசம்பாவிதங்கள் நடந்து வருகிறது. உங்கள் பகுதிகளில் மழைக்காலங்களில் மழை நீரில் மின் வயர் அறுந்து விழுதலோ, டிரான்ஸ்பார்மர் தீப்பற்றி எரிதலோ, எதிர்பாராத மின்தடை, விட்டில் ஏற்படும் மின்சார பிரச்சனைகளுக்கு தமிழ அரசின் மின் நுகர்வோர் சேவை மையம் மூலம் ‘9498794987’ என்ற எண்ணில் உங்கள் வீட்டில் இருந்தே புகார் கொடுக்கலாம். இதை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News March 4, 2026

அரியலூர்: பாமகவினர் துண்டு பிரசுரம் விநியோகம்

image

அரியலூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் தமிழ் மறவன் அறிவுறுத்தலின்படி, அன்புமணி ராமதாஸ் தரப்பைச் சார்ந்த நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் பொதுமக்களை நேரில் சந்தித்து துண்டு பிரசுரங்கள் வழங்கினர். அதன் ஒரு பகுதியாக நேற்று ஆண்டிமடம் ஒன்றியத்திற்கு உட்பட்ட குவாகம், வல்லம், மருதூர், கொடுகூர் உள்ளிட்ட கிராம மக்களை சந்தித்து துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

News March 4, 2026

அரியலூர்: காவல்துறையினருக்கு சான்றிதழ் வழங்கிய எஸ்.பி

image

அரியலூர் மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் காவல் துறையினருக்கு, அரியலூர் மாவட்ட ஆயுதப்படையில் புத்தாக்க பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 3, 4வது பேட்ச் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு சிறந்து விளங்கி முதல், 2 மற்றும் 3-ம் இடம் பிடித்த காவல்துறையினரை அரியலூர் மாவட்ட எஸ்.பி விஷ்வேஷ் பா.சாஸ்திரி நேற்று (மார்ச் 03) தனது அலுவலகத்திற்கு நேரில் வரவழைத்து சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

News March 4, 2026

அரியலூர் மாவட்டத்தில் புதிதாக 5 ரேஷன் கடைகள்!

image

அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா இன்று (மார்ச்- 04) பொய்யாதநல்லூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நடைபெற உள்ள நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார். அதன்படி பொய்யாதநல்லூர், வெள்ளூர், சென்னிவனம், தேளூர், ஏழேரி உள்ளிட்ட பகுதிகளில் புதிதாக நியாயவிலை கடைகள் திறப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!