News September 9, 2025
திருப்பூர்: இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

காங்கேயம், படியாண்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜீவா (20). ஆட்டோ ஓட்டுநர். இவரது மனைவி செளமியா (23). இவருவரும் கடந்த 6 மாதத்திற்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.இந்நிலையில் செளமியா கடந்த ஒரு வாரமாக கணவர் ஜீவாவிடம் சினிமா பார்க்க அழைத்து செல்லுமாறு கேட்டதாகவும், ஆனால் ஜீவா அழைத்து செல்ல வில்லை என கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த செளமியா நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
Similar News
News September 10, 2025
திருப்பூர்: NO EXAM ரயில்வேயில் 2418 பணியிடங்கள்!

திருப்பூர் மக்களே மத்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள 2418 அப்ரண்ட்டிஸ் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10th (அ) ITI தகுதி போதுமானது, மாதம் ரூ.7,700 முதல் ரூ.8,050 வரை சம்பளம் வழங்கப்படும். இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News September 10, 2025
திருப்பூர் மக்களுக்கு நல்ல செய்தி!

திருப்பூர் உடுமலை அருகே அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை சில வருடங்களாக இயந்திரங்கள் பழுது காரணமாக மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் விவசாயிகள் கோரிக்கையை ஏற்று சர்க்கரை ஆலையில் செயல்பாடுகளை மீண்டும் தொடங்குவதற்கு பொருத்தமான நடவடிக்கைகளை பரிந்துரைக்க நிபுணர் குழு அமைத்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
News September 10, 2025
திருப்பூரில் ரூ.38 இலட்சம் மதிப்புடையவை அழிப்பு

ரூபாய் 38,60,000 மதிப்புள்ள 2000 கிலோ கஞ்சா கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொருட்கள் சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி திருப்பூர் மாநகர போலீஸ்சார் அழித்தனர். உடன் கஞ்சா அழிப்பு குழு தலைவர் மற்றும் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் மேற்பார்வையிலும் திருப்பூர் நீதித்துறை நீதிபதிகள் முன்னிலையிலும் இந்நிகழ்வு நடைபெற்றது.