News September 9, 2025
BREAKING: தங்கம் விலையில் மிகப்பெரிய மாற்றம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(செப்.9) வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. நேற்று(செப்.8) சவரனுக்கு ₹720 உயர்ந்த நிலையில், இன்றும் ₹720 என தொடர்ந்து தாறுமாறாக உயர்ந்துள்ளது. இதனால், 22 கேரட் 1 கிராம் ₹10,150-க்கும், ஒரு சவரன் ₹81,200-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி 1 கிராம் ₹140-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹1,40,000-க்கும் விற்பனையாகிறது.
Similar News
News March 15, 2026
BREAKING: தமிழகம் முழுவதும் விடுமுறை

TN சட்டப்பேரவை தேர்தல் ஏப்.23-ம் தேதி (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. பொதுமக்கள் வாக்களிக்க ஏதுவாக அன்றைய தினம் தமிழகம் முழுவதும் பொது விடுமுறையாகும். கோடை விடுமுறை என்பதால், பள்ளிகளுக்கு ஏற்கெனவே லீவுதான். கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் ஏப்.23 அன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல், புதுச்சேரிக்கு ஏப்.9 அன்று பொது விடுமுறையாகும். மறக்காமல் வாக்களியுங்கள் மக்களே!
News March 15, 2026
நெருங்கும் தேர்தல்.. ₹500 கட்டுகளுக்கு RBI கட்டுப்பாடு

5 மாநில தேர்தல் காரணமாக, பணப்பட்டுவாடாவை தடுக்க ரிசர்வ் வங்கி மூலம் ECI பணிகளை தொடங்கியுள்ளது. அனைத்து வங்கிக் கிளைகளிலும் ₹5 லட்சத்துக்கு மேல் ₹500 கட்டுகள் வழங்கக்கூடாது என RBI வாய்மொழி உத்தரவிட்டுள்ளதாம். அதேநேரம், ₹200, ₹100 நோட்டுகளுக்கு எவ்வித கட்டுப்பாடும் போடவில்லை என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.
News March 15, 2026
தமிழக தேர்தல்.. மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனே தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இனி பொதுமக்கள் வெளியே செல்லும்போது ₹50,000 வரை மட்டுமே எடுத்துச் செல்ல முடியும். அதற்கு மேல் பணத்தை எடுத்துச் சென்றால் உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் பறக்கும்படையினர் சோதனையில் பணம் பறிமுதல் செய்யப்படும். SHARE IT


