News September 9, 2025
செங்கோட்டையன் வாழ்வில் செய்த முக்கிய தவறு!

அதிமுகவில் அதிமுக்கியத்துவம் வாய்ந்த தலைவராக இருந்தும் செங்கோட்டையன் பக்கம் நிற்க இரண்டாம் கட்ட தலைவர்கள் தயக்கம் காட்டுகின்றனர். அதற்கு அவரது கடந்த கால செயல்பாடுகளே காரணம் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, தலைமையிடம் விசுவாசமாக இருந்தாலும், நிர்வாகிகளிடம் அதனை அவர் காட்டவில்லையாம். அதோடு, 2017-ல் CM நாற்காலி அவரை தேடி வந்ததை தவற விட்டது பெரும் தவறு என்கின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?
Similar News
News September 10, 2025
₹200 கோடி.. வசூலில் கெத்து காட்டும் ‘லோகா’

இந்தியாவின் முதல் Super Women படமான ‘லோகா சாப்டர் 1: சந்திரா’ உலகம் முழுவதும் ₹200 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ₹30 கோடி செலவில் இப்படத்தை நடிகர் துல்கர் சல்மான் தயாரித்து இருந்தார். கல்யாணி பிரியதர்ஷன் கதை நாயகியாக நடிக்க, டொமினிக் அருண் இப்படத்தை இயக்கி இருந்தார். மலையாளத்தில் உருவாகி, கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி பான் இந்தியா படமாக வெளியானது.
News September 10, 2025
ஆசிய கோப்பை: இந்திய அணியின் PLAYING XI இதுவா?

ஆசிய கோப்பையில் UAE அணிக்கு எதிராக தனது முதல் போட்டியில் நாளை(செப்.10) இந்திய அணி களமிறங்குகிறது. Times of India தகவலின்படி, இந்திய அணியின் PLAYING XI-ல், கில் அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ்(C), அக்ஷர் படேல், ஹர்திக் பாண்ட்யா, ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா(WK), பும்ரா, வருண், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இடம்பெறுவர் எனக் கூறப்படுகிறது. இந்த அணி எப்படி இருக்கிறது?
News September 10, 2025
தோல்வியை ஏற்கிறேன்: சுதர்சன் ரெட்டி

துணை ஜனாதிபதிக்கான இந்தியா கூட்டணி வேட்பாளர் பி.சுதர்சன் ரெட்டி, தேர்தல் முடிவு பற்றி மனம் திறந்துள்ளார். அதில், எனக்கு வெற்றி கிட்டவில்லை. ஜனநாயகத்தில் வெற்றியை மட்டுமல்ல, தோல்வியையும் ஏற்க வேண்டும். என் சித்தாந்த ரீதியான போராட்டத்தை கூடுதல் பலத்துடன் தொடர்வேன் என்றார். து.ஜனாதிபதி தேர்தலில் 452 வாக்குகள் பெற்று சி.பி.ராதாகிருஷ்ணன் வென்றார். சுதர்சன் ரெட்டி 300 வாக்குகள் பெற்றார்.