News September 9, 2025

காரைக்குடி: பூட்டை உடைத்து 40 பவுன் நகை கொள்ளை

image

காரைக்குடி, பெரியார் நகரை சேர்ந்த வாணிஸ்ரீ நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு மதுரை பாண்டி கோவிலுக்கு சென்றனர். பின்னர் வீடு திரும்பிய நிலையில் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது 3 பீரோக்களும் உடைக்கப்பட்டு 40 பவுன் நகைகள் கொள்ளை போனது தெரிய வந்தது. கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Similar News

News September 9, 2025

சிவகங்கை: புதிதாக பொறுப்பேற்ற வட்டாட்சியருக்கு வரவேற்பு

image

சிவகங்கை வட்டத்திற்கு புதிதாக பொறுப்பேற்றிருக்கும் வட்டாட்சியர் மல்லிகார்ஜூன் மற்றும் ஒக்கூர் மண்டல துணை வட்டாட்சியர் தனபால் ஆகியோரை சிவகங்கை மாவட்ட கிராம நிர்வாக உதவியாளர்கள் சங்கப் பிரதிநிதிகள் இன்று (செப்-09) கைத்தறியாடை போர்த்தி வரவேற்றனர்.

News September 9, 2025

சிவகங்கை மாவட்ட மக்களின் கனிவான கவனத்திற்கு..!

image

ஹூப்ளி – ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை, அக்டோபர் மாத முதல் இறுதி வரை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. பூஜா விடுமுறை மற்றும் தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் தேவை உள்ள பயணிகள் பயன்படுத்தி கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயிலானது சிவகங்கை, காரைக்குடி, திருச்சி, கரூர், சேலம் வழியாக செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. SHARE IT..!

News September 9, 2025

BREAKING சிவகங்கை வரும் விஜய்

image

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் செப்.13 முதல் டிச.20 வரை தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை மேற்கொள்ள உள்ளார். அதன்படி நவ.29 அன்று சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட மக்களை சந்திக்க உள்ளார். இதற்காக பாதுகாப்பு கோரி காவல்துறையினரிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.

error: Content is protected !!