News September 9, 2025
நீலகிரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை!

ஊட்டி அருகே முட்டிநாடு கிராமத்தை சுற்றி சிவசெந்துார் நகர், செல்விப் நகர், ஈஸ்வர நகர் என, 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதிகளிலிருந்து ஊட்டி, குன்னுாருக்கு அரசு, தனியார் வேலைக்கு செல்பவர்கள் மற்றும் பள்ளி, கல்லுாரிக்கு தினமும் ஏராளமானோர் சென்று வருகின்றனர்.கிராமத்திற்கு சீராக பஸ் இயக்க கோரி கிராம மக்கள் ஒன்று திரண்டு வந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Similar News
News March 13, 2026
உதகையில் தமிழக வெற்றிக் கழகம் ஆர்ப்பாட்டம்

உதகை ஏடிசி திடலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமையில், செயலாளர் பாமா ரமேஷ் முன்னிலையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரியும், தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் போதை புழக்கத்தைத் தடுக்கத் தவறிய மாநில அரசைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
News March 12, 2026
நீலகிரி: உங்களைத் தேடி வரும் பெட்ரோல்!

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் <
News March 12, 2026
நீலகிரி: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
2) விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
3) அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
4) பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்.
5) இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.


