News September 9, 2025
வேலூர்: அடிக்கடி மின் துண்டிப்பு: பொதுமக்கள் அவதி

வேலூர், காட்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடிக்கடி மின் துண்டிப்பு ஏற்படுவதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். குறிப்பாக, மழைக்காலங்களில் வயதானவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகள் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகப் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். எனவே, இந்தப் பிரச்சினையைத் தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின்வாரியத்திற்குப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News September 9, 2025
வேலூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விபரம்

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பாக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு வந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று (செப்.09) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
News September 9, 2025
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு விரைந்த வேலூர் போலீசார்

ராமநாதபுரம் மாவட்டத்தில் தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாள் வரும் செப்டம்பர் 11-ம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அங்கு பாதுகாப்பு பணிக்காக வேலூர் மாவட்டத்தில் இருந்து ஏடிஎஸ்பி பாஸ்கரன் தலைமையில் 180 போலீசார் இன்று (செப்.09) ராமநாதபுரம் மாவட்டத்திற்கு புறப்பட்டு சென்றனர். என மாவட்ட காவல் துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 9, 2025
வேலூர்: B.E./B.Tech படித்திருந்தால் வேலை!

வேலூர் மக்களே, Indian Oil Corporation Limited (IOCL) காலியாக உள்ள Graduate Engineer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.E./B.Tech படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.50,000 – ரூ.1,60,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <