News September 9, 2025

யார் அடுத்த துணை ஜனாதிபதி?

image

நாட்டின் அடுத்த துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய 781 MP-க்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். பார்லிமென்ட்டில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைகிறது. பின்னர் 6 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். சுமார் 2 மணி நேரத்தில் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. NDA கூட்டணியில் சி.பி.ராதாகிருஷ்ணனும், INDIA கூட்டணியில் சுதர்சன் ரெட்டியும் களத்தில் உள்ளனர்.

Similar News

News March 19, 2026

கடன் தள்ளுபடி.. புதிய தேர்தல் அறிவிப்பு

image

மாணவர்களின் கல்விக் கடன் முற்றிலும் ரத்து செய்யப்படும் என்று சீமான் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார். மேலும், *படிப்படியாக ஓராண்டிற்குள் மதுக்கடைகள் மூடப்படும் *இடஒதுக்கீட்டில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் வகையில் மாற்றம் கொண்டுவரப்படும் *ஆற்றுநீரை பயன்படுத்தும் குளிர்பான ஆலைகளுக்கு தடை விதிக்கப்படும் * 60 வயதிற்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்.

News March 19, 2026

விஜய்க்கு எதிராக சத்யராஜ் மகள்?

image

விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டால், அவருக்கு எதிராக ஒரு நட்சத்திர வேட்பாளரை நிறுத்த திமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த முறை பெரம்பூர் தொகுதியில் திமுகவின் ஆர்.டி.சேகர் 54 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவருக்குத்தான் இம்முறை சீட் கிடைக்க வாய்ப்பு அதிகம் என்றாலும், விஜய் போட்டியிடுவது உறுதியானால், சத்யராஜின் மகள் திவ்யாவை நிறுத்த திமுக திட்டமிட்டுள்ளதாம்.

News March 19, 2026

சுபமுகூர்த்தம்.. வாக்குப்பதிவில் பாதிப்பை ஏற்படுத்துமா?

image

தமிழகத்தில் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள ஏப்.23-ம் தேதி (சித்திரை 10), இந்தாண்டின் மிகச்சிறந்த வளர்பிறை சுபமுகூர்த்த நாளாக உள்ளது. இதனால் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளுக்காக பலரும் வெளியூருக்கு செல்ல நேரிடும். மேலும் முகூர்த்த நேரம் காலை 9-10:30 மணிக்குள் இருப்பதால், அவர்கள் வாக்குச்சாவடிக்கு வரமுடியாமல் போனால் வாக்குப்பதிவு பாதிக்கப்படும். இதனால் அரசியல் கட்சியினர் கலக்கமடைந்துள்ளனர்.

error: Content is protected !!