News September 9, 2025

தர்மபுரி: பெயர்க் காரணம் தெரியுமா?

image

தர்மபுரி என்ற பெயருக்குப் பின்னால் இருவேறு கதைகள் உள்ளன. மகாபாரதக் காலத்தில், பஞ்ச பாண்டவர்களில் மூத்தவரான யுதிஷ்டிரன், வனவாசத்தின்போது இங்கு தங்கி ஆட்சி செய்ததால், அவரது பெயரால் ‘தர்மபுரி’ எனப் பெயர் வந்திருக்கலாம் எனவும், பண்டைய காலத்தில் இப்பகுதியை ஆண்ட மன்னன் அதியமான், நீதிக்கும், தர்மத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து ஆட்சி செய்ததால், ‘தர்மபுரி’ என அழைக்கப்பட்டது. SHARE பண்ணுங்க.

Similar News

News September 9, 2025

தர்மபுரி மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விபரம்

image

தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (செப்.09) இரவு ரோந்து செல்லும் காவலர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தலைமை அதிகாரியாக சூர்யா நியமிக்கப்பட்டுள்ளார். தர்மபுரி, அரூர், பென்னாகரம் மற்றும் பாலக்கோடு ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தொடர்பு கொள்வதற்கு தொடர்புஎண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News September 9, 2025

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

தர்மபுரி மாவட்ட நிர்வாகம் சார்பில் கல்விக்கடன் முகாம் வருகின்ற 12ம் தேதி வெள்ளிகிழமை அன்று தருமபுரி வட்டம், குண்டல்பட்டி கிராமம், கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வருவான் வடிவேலன் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் காலை 10 மணி முதல் 4 மணி வரை நடைபெற உள்ளது.

News September 9, 2025

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

image

தருமபுரி மாவட்டம், செட்டிக்கரை RPRS திருமண மஹாலில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகள் வேண்டி விண்ணப்பித்த பயனாளிகளின் மனுவின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, உடனடியாக பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஸ்(செப்-9) இன்று வழங்கினார். உடன் வட்டாட்சியர்கள் ராஜராஜன், சௌகத்அலி, மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!