News September 9, 2025
அரியலூர்: சிறந்த காவல் நிலையத்திற்கான பரிசு

தமிழ்நாடு அரசின் மூலம் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கை உள்ளிட்டவற்றில் சிறந்து விளங்கும் மாவட்ட மாநகர அளவில் சிறந்த காவல் நிலையங்களுக்கு முதலமைச்சரின் சிறந்த காவல் நிலையங்களுக்கான பரிசு வழங்கப்படுகிறது. இதனை ஒட்டி அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் காவல் நிலையத்திற்கு சிறந்த காவல் நிலையங்களுக்கான பரிசினை மாவட்ட எஸ்பி விஷ்வேஷ் பாஸ் சாஸ்திரி வழங்கினார்.
Similar News
News March 3, 2026
அரியலூர்: 20 தாசில்தார்கள் பணியிட மாற்றம்

அரியலூர் மாவட்டத்தில், பல்வேறு நிலைகளில் இருந்த 20 தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி உத்தரவிட்டுள்ளார். அரியலூர் தாசில்தாரராக தேவகியும், ஆண்டிமடம் தாசில்தாரராக சுசிலாவும், செந்துறை தாசில்தாரராக கோவிந்தராஜனும், உடையார்பாளையம் தாசில்தாரராக ஆனந்தவேல், அரியலூர் RDO நேர்முக உதவியாளராக வேலுமணியும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News March 3, 2026
அரியலூர்: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்!

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <
News March 3, 2026
அரியலூர்: பாமகவினர் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரம் வழங்கல்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சியினர் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கினர். பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவுறுத்தலின்படியும், பாமக இணை பொது செயலாளர் வழிகாட்டலின் படியும், வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க மறுக்கும் தமிழக அரசை கண்டித்து இந்த துண்டு பிரசுரங்களை வழங்கி வருவதாக தெரிவித்துள்ளனர்.


