News September 9, 2025
கள்ளக்குறிச்சி: போக்ஸோவில் ஒருவர் கைது

நாககுப்பத்தை சேர்ந்த மணிகண்டன், கடந்த சில மாதங்களுக்கு முன் 16வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமிக்கு கடந்த ஆக-25 அன்று வயிற்று வலி ஏற்பட்டது. மருத்துவமனையில் கர்ப்பமான சிறுமியின் கருவை பெற்றோர்கள் கலைத்தனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அளித்த புகாரில், கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் மணிகண்டன் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
Similar News
News September 9, 2025
திட்ட பணிகள் குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மகளிர் திட்டத்தின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு விதமான திட்ட பணிகள் குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் இன்று செப்டம்பர் 09-ம் தேதி நடைபெற்றது.இதில் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்
News September 9, 2025
மா.செ கூட்டத்தில் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் கள்ளக்குறிச்சி திமுக வடக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் இருந்து இன்று கள்ளக்குறிச்சி திமுக வடக்கு மாவட்ட கழக செயலாளர் உதயசூரியன் கலந்து கொண்டார்.
News September 9, 2025
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் “தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்” இன்று நண்பகல் 12.00 மணியளவில் காணொலி காட்சி (Video Conference) மூலம் நடைபெற்றது. இதில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு மற்றும் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கா. கார்த்திகேயன் கலந்து கொண்டனர்.