News September 9, 2025
திருச்சி: இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து – ஒருவர் உயிரிழப்பு

திருச்சி – கரூர் தேசிய நெடுஞ்சாலையில் முத்தரசநல்லூர் பேரிகார்டு அருகே, எதிரெதிரே வந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், ஒரு இருசக்கர வாகனத்தில் வந்த டிஎன்பிஎல் நிறுவனத்தில் பணியாற்றி வரும் முத்தரசநல்லூரைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து ஜீயபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News September 9, 2025
திருச்சி: விவசாயிகளுக்கு மாநில அளவிலான விருது

திருச்சி மாவட்டத்தில் வேளாண் சாகுபடிக்கான நவீன தொழில்நுட்ப கருவிகளை கண்டுபிடித்த சிறந்த விவசாயிகளுக்கு மாநில அளவில் விருதுகள் வழங்கப்பட உள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள் தங்களது பெயரை உழவர் செயலி மூலம் பதிவு செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, பதிவு கட்டணம் ரூ.150 சேர்த்து வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் வழங்க வேண்டும் என மாவட்ட வேளாண் இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
News September 9, 2025
திருச்சி: பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் ரத்து

திருச்சி கோட்ட ரெயில்வே பகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் பராமரிப்பு பணிகள் பணிகள் நடைபெறுவதால் விழுப்புரம் -மயிலாடுதுறை மெமு ரெயில் வருகிற 13, 20,27 ஆகிய தேதிகளில் விழுப்புரத்தில் இருந்து 25 நிமிடம் தாமதமாக புறப்படும். மேலும் மயிலாடுதுறை-திருச்சி மெமு ரயில் வருகின்ற 10ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
News September 9, 2025
திருச்சி: விரைவு ரயில் ரத்து?

பராமரிப்பு பணி காரணமாக மயிலாடுதுறை – திருச்சி விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மயிலாடுதுறை – திருச்சி விரைவு ரயிலானது செப்டம்பர் 10 ஆம் தேதி முதல் அக்டோபர் 3 வரை ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் இம்மாதம் 16, 23, 30 ஆகிய தேதிகளில் மட்டும் மேற்குறிப்பிட்ட வழித்தடத்தில் இயக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.