News September 9, 2025
திமுக 200, அதிமுக 210.. தேர்தல் களம் சூடுபிடித்தது

2026 தேர்தலுக்காக ஏதோ ஒரு நிறுவனம் நடத்திய கருத்துகணிப்பு முடிவுகள் என நினைக்காதீங்க. திமுக, அதிமுக தலைவர்களின் வெற்றிக்கான ஆருடம் இது. இத்தனை நாள்களாக <<14952930>>திமுக 200 <<>>தொகுதிகளில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என கூறிவந்த நிலையில், அதிமுக <<17645097>>210 தொகுதிகளில் வெற்றி<<>> என EPS, புதிதாக கூறியுள்ளது அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது. நடிகர் விஜய் 150 தொகுதிகளை குறிவைத்துள்ளாராம். இதில், யாருடைய வியூகம் பலிக்கும்?
Similar News
News September 9, 2025
Beauty: பிறரை கவர இந்த மாதிரி Dress பண்ணுங்க!

ஆண்களே, உங்களை சுற்றி இருக்கும் எல்லோரையும் கவர வேண்டுமா? அதற்கு உங்கள் பேச்சு, நடை, பாவனை மட்டும் போதாது. எந்த மாதிரியான ஆடைகளை நீங்கள் அணிகிறீர்கள் என்பதும் அவசியமாகிறது. மேலே இருக்கும் புகைப்படங்களை SWIPE செய்து, எந்த நிற சட்டைக்கு எந்த நிற பேண்ட் அணிந்தால் நன்றாக இருக்கும் என தெரிந்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு தெரிந்த ஆண்களுக்கும் இந்த செய்தியை SHARE செய்யுங்கள்.
News September 9, 2025
எங்கும் வன்முறை… எரியும் நேபாளம் PHOTOS

ஊழலுக்கு எதிரான போராட்டம், சோஷியல் மீடியாக்களை தடை செய்ததை எதிர்த்து போராட்டம் என மெல்ல மெல்ல எழுச்சிபெற்ற நேபாள இளைஞர்களின் போராட்டம், இறுதியாக வன்முறைப் போராட்டமாக உருவெடுத்துள்ளது. நாடாளுமன்றத்துக்கு தீ, பிரதமர் வீட்டுக்கு தீ என எங்கும் பற்றியெரிகிறது. வன்முறைக்கு வன்முறையால் பதிலளித்த ஆட்சியாளர்கள் ஓடி ஒளிந்து கொண்டுள்ளனர். முக்கிய போராட்ட காட்சிகளை மேலே ஸ்வைப் செய்து பாருங்கள்.
News September 9, 2025
பனிச்சரிவில் சிக்கி 3 ராணுவ வீரர்கள் பலி

லடாக்கில் உள்ள சியாச்சின் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது. 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு, அவர்களது உடல்கள் மீட்கப்பட்டன. உயிரிழந்த வீரர்கள் குஜராத், UP, ஜார்க்கண்டைச் சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 12,000 அடி உயரத்தில் சியாச்சின் உள்ளது. இங்கு பனிச்சரிவு உயிரிழப்புகள் அடிக்கடி நிகழ்வது உண்டு.