News September 9, 2025
உங்களுக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதி இருக்கா?

பலருக்கு தூக்கத்தில் பேசும் பழக்கமும், சிலருக்கு தூக்கத்தில் நடக்கும் பழக்கமும் இருக்கும். இதனை கட்டுப்படுத்த முதலில் நாம் தூங்கச் செல்லும் நேரத்தை சீராக கடைபிடிக்க வேண்டும். தூங்கும் அறையில் டிவி பார்ப்பது, அலுவல் சார்ந்த வேலைகளை செய்வது உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும். இரவு நேரத்தில் அதிக கலோரிகள் நிறைந்த உணவுகளை தவிர்ப்பது நலம். தூக்கத்துல பேசுற உங்க ஃப்ரெண்ட்ஸ்-க்கு இதை ஷேர் பண்ணுங்க!
Similar News
News September 9, 2025
₹222 சேமித்தால், ₹4.5 லட்சம் கிடைக்கும் திட்டம்!

பெரிய ரிஸ்க் இல்லாத சிறிய முதலீடுகள் அல்லது சேமிப்புகளுக்கு அஞ்சலக RD ஒரு சிறந்த திட்டம். இதில் தினமும் ₹222 சேமித்தால், தற்போதைய வட்டி விகிதமான 6.7% அடிப்படையில், 5 ஆண்டுகளுக்குப் பிறகு உங்களுக்கு சுமார் ₹4.5 லட்சம் கிடைக்கும். தொடர்ந்து 10 ஆண்டுகள் இதனை நீட்டித்தால் ₹11 லட்சம் வரை பெறலாம். இந்த கணக்கை தொடங்க, அருகிலுள்ள அஞ்சலகத்தை அணுகுங்கள். SHARE.
News September 9, 2025
15-வது துணை ஜனாதிபதி, 17-வது தேர்தல்: ஏன் தெரியுமா?

நாட்டின் 15-வது துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான 17-வது தேர்தல் நடைபெற்று வருகிறது. ஏனென்றால், 2 பேர் தலா 10 ஆண்டுகள் துணை ஜனாதிபதியாக இருந்துள்ளனர். டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்: 1952 – 1962, முகமது ஹமீது அன்சாரி: 2007 – 2017 என பதவி வகித்துள்ளனர். எனவேதான், இது 17-வது தேர்தலாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. தற்போதைய தேர்தலில் CP ராதாகிருஷ்ணன், பி.சுதர்சன் ரெட்டி போட்டியிடுகின்றனர்.
News September 9, 2025
பற்றி ஏரியும் நேபாளத்தின் பதறவைக்கும் போட்டோஸ்!

இமயமலை அடிவார நாடான நேபாளம் தற்போது பற்றி எரிந்து வருகிறது. பேஸ்புக், வாட்ஸ்அப், யூடியூப், எக்ஸ், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட முக்கிய சமூக வலைதளங்கள் நாடு முழுவதும் தடை செய்யப்பட்ட நிலையில், ஒட்டுமொத்த இளைஞர் சமுதாயமும் வெகுண்டெழுந்து விட்டனர். இந்த தன்னெழுச்சி போராட்டத்தில் பிரதமர், மந்திரிகளின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. பற்றி ஏரியும் நாட்டின் பதைபதைக்கும் போட்டோஸை Swipe செய்து பார்க்கவும்.