News September 9, 2025
குடிநீர் ஆலைகளில் ஆய்வு மேற்கொள்ள உத்தரவு

செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்படும் குடிநீர் உற்பத்தி ஆலைகளில் ஆய்வு மேற்கொள்ள தமிழக உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் 3 குழுவாக பிரிந்து குடிநீர் தயாரிக்கப்படும் ஆலைகளில் குடிநீர் தயாரிக்கப்படும் தேதி, குடிநீர் காலாவதியாகும் தேதி, மற்றும் கடைகளில் விற்கப்படும் கேன் குடிநீர் ஆகியவற்றை ஆய்வு செய்ய உத்தரவு.
Similar News
News September 9, 2025
மறைமலை நகரில் உயிர் நண்பன் மீது கொலை வெறி தாக்குதல்

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில், மதுபோதையில் ஏற்பட்ட தகராறில், தீர்த்தகிரி என்ற இளைஞர் தனது உயிர் நண்பரான தயாநிதியை சுத்தியலால் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த தயாநிதி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவத்தையடுத்து போலீசார் தீர்த்தகிரியை கைது செய்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News September 9, 2025
BREAKING: செங்கல்பட்டு வரும் விஜய்

2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், பல்வேறு கட்சியினர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வரும்.13ம் தேதி முதல் டிசம்பர் 20ம் தேதி வரை பிரச்சாரம் செய்கிறார். அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்திற்கு வரும் அக்டோபர் 25-ம் தேதி பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார். (SHARE)
News September 9, 2025
மாநகராட்சி ஆணையர் திடீர் ஆய்வு

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட மண்டலம் 3 வார்டு 34-ல் உள்ள சிட்லபாக்கம் மாநகராட்சி துவக்கப்பள்ளியில் உள்ள சமையல் கூடத்தில் முதல்வரின் காலை உணவு திட்டம் முறையாக செயல்படுகிறதா என தாம்பரம் மாநகராட்சி ஆணையர் சீதா பாலச்சந்தர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது உணவு குடிநீர் முறையாக வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தார். உடன் அலுவலர்கள் இருந்தனர்.