News April 10, 2024

I.N.D.I.A 400 இடங்களுக்கு மேல் வெல்லும்

image

நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் I.N.D.I.A கூட்டணி 400 தொகுதிகளுக்கு மேல் பெற்று வெற்றி பெறும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப் பெருந்தகை நம்பிக்கை தெரிவித்துள்ளார். கடந்த தேர்தலை விட இரு மடங்கு வாக்கு வித்தியாசத்தில் இந்த முறை காங்கிரஸ் வேட்பாளர்கள் வெல்வார்கள் என்றும் அவர் பேசியிருக்கிறார். இதுகுறித்து உங்களது கருத்து என்ன?

Similar News

News April 25, 2025

ஏப்ரல் 25: வரலாற்றில் இன்று

image

▶ உலக மலேரியா நாள். ▶ 1874 – ரேடியோவை கண்டுபிடித்த இயற்பியலாளர் மார்க்கோனி பிறந்த நாள். ▶ 1906 – எழுத்தாளர் புதுமைப்பித்தன் பிறந்த நாள். ▶ 1912 – தமிழ் அறிஞர் மு. வரதராசன் பிறந்த நாள். ▶ 1644 – சீனாவின் கடைசிப் பேரரசர் சொங்சென் தற்கொலை செய்து கொண்டார். ▶ 2015 – நேபாளத்தில் 7.8 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 9,100 பேர் உயிரிழந்தனர்.

News April 25, 2025

அப்பாடா.. சொந்த மண்ணுல ஜெயிச்சிட்டோம்!

image

இதுதான் RCB ரசிகர்களோட தற்போதைய ரியாக்‌ஷன். வெளி மைதானங்களில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்ற அந்த அணிக்கு, சொந்த மைதானமான பெங்களூருவில் வெற்றி கிடைக்காமல் இருந்தது. அந்த குறையை தீர்த்து வைத்திருக்கிறது RR அணி. சொந்த மண்ணில் முதல் 3 போட்டிகளில் தோற்ற RCB, நேற்றைய போட்டியில் வாகை சூடியுள்ளது. ஒட்டுமொத்தமாக 9 போட்டிகளில் விளையாடிய RCB, 6 போட்டிகளில் வென்று புள்ளிப் பட்டியலில் 3-ம் இடத்தில் உள்ளது.

News April 25, 2025

போருக்கு தயாராகும் பாகிஸ்தான்!

image

இந்திய எல்லையில் உள்ள வீரர்களின் எண்ணிக்கையை பாக். ராணுவம் அதிகரித்து வருகிறது. பதுங்கு குழியில் இருந்து மட்டுமே கண்காணிக்கவும், ராவல்பிண்டியில் உள்ள 10 படைப்பிரிவைச் சேர்ந்த வீரர்கள் தீவிர உஷார் நிலையில் இருக்கவும் ஆணையிடப்பட்டுள்ளது. அதேபோல், இந்திய எல்லை பகுதி மட்டுமில்லாமல், சர்வதேச எல்லைகளான சியால்கோட், குஜ்ரன்வாலா பகுதிகளிலும் வீரர்களை அதிகரித்து வருகிறது.

error: Content is protected !!