News September 8, 2025
50% தள்ளுபடி.. வாகன ஓட்டிகளுக்கு Happy News

செப்.13-ம் தேதியன்று நடைபெறவுள்ள தேசிய லோக் அதாலத் மூலம் நிலுவையில் உள்ள Traffic Fine-களை 50% வரை தள்ளுபடி செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஓவர் ஸ்பீடு, ஹெல்மெட் அணியாதது, சிக்னலில் நிற்காமல் சென்றது உள்ளிட்ட 13 வகையான விதிமீறல்கள் இதில் அடங்கும். அதற்கு National Legal Services Authority-யின் ( NALSA) இணையதளத்தில் பதிவு செய்து, டோக்கன்களை பெற வேண்டும். SHARE IT
Similar News
News September 9, 2025
ஃபோன் தொலைந்தால் என்ன செய்யணும் தெரியுமா?

இந்தியாவில் <<17653918>>செல்போன் திருட்டு <<>>வாடிக்கையாகிவிட்டது. உங்கள் ஃபோன் திருடுபோனால் என்ன செய்யவேண்டும் என்பதை தெரிந்துவைத்துக்கொள்ளுங்கள். ➤முதலில் ஃபோனின் IMEI நம்பரை நோட் செய்து, போலீசிடம் புகாரளிக்கவும் ➤அதன் பிறகு கூகுளில் https://www.ceir.gov.in/ போர்ட்டலுக்குள் சென்று ஃபோன் குறித்த தகவல்களை உள்ளிடுங்கள் ➤மொபைலில் உள்ள ஆக்டிவ் சிம்மை பிளாக் செய்யவேண்டும். SHARE.
News September 9, 2025
செங்கோட்டையன் புதிய முடிவு.. அதிமுகவில் மீண்டும் பரபரப்பு

டெல்லியில் FM நிர்மலா சீதாராமனை, கே.ஏ.செங்கோட்டையன் சந்தித்து பேசியுள்ளார். அப்போது, ஒருங்கிணைந்த அதிமுகவாக 2026 தேர்தலை சந்தித்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என அவர் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இன்று பிற்பகலில் தமிழகம் திரும்பும் செங்கோட்டையன், TTV தினகரனை நேரில் சந்தித்து பேச உள்ளார். முன்னதாக OPS-ம் செங்கோட்டையனை சந்திக்க உள்ளதாக கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.
News September 9, 2025
மீண்டும் மறுப்பு.. நீதிமன்றத்தை நாடும் தவெக?

தனது பிரசார பயணத்தை திருச்சியில் இருந்து துவங்கவிருக்கிறார் தவெக தலைவர் விஜய். இதற்காக போலீஸாரிடம் அனுமதி கேட்கப்பட்டு வருகிறது. ஆனால், பிரசார இடத்தை மாற்ற வேண்டும், பேசும் நேரத்தை குறைக்க வேண்டும், மாற்று சாலைகளில் ரோடு ஷோ செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்படுகிறதாம். இந்நிலையில், இது அரசியல் உள்நோக்கோடு கூறப்படுவதாக கருதும் தவெக, நீதிமன்றத்தை நாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.