News September 8, 2025
இரவு ரோந்து காவலர்கள் விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (08.09.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியாகி உள்ளது. பர்கூர், தேன்கனிக்கோட்டை, ஓசூர், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி பகுதியில் மாவட்ட பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள் இரவு நேரத்தில் உதவி தேவைப்பட்டால் தனிப்பட்ட மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Similar News
News September 9, 2025
கிருஷ்ணகிரியில் 2000 போலீசார் பாதுகாப்பு பணி

கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு 2 நாள் பயணமாக முதல்வர் ஸ்டாலின் வருகை தரவுள்ளார். முதல்வர் வருகையொட்டி போலீசார் தற்போது பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இதற்காக கோவை மேற்கு மண்டல ஐ.ஜி., செந்தில்குமார் தலைமையில், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் உட்பட, 8 மாவட்டங்களிலிருந்து, 2,000க்கும் மேற்பட்ட போலீசார் வரவழைக்கப்பட உள்ளனர்.
News September 9, 2025
BREAKING: கிருஷ்ணகிரியில் தவெக தலைவர் விஜய் பிரசாரம்!

நடிகர் விஜய், தனது தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியின் மூலம், 2026 தேர்தலை நோக்கிப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். கட்சியின் முதல் 2 மாநாடுகளை வெற்றிகரமாக முடித்த பிறகு, மாவட்ட வாரியாகப் பிரசாரங்களை மேற்கொள்ள இருக்கிறார். வரும் செப்.13-ல், திருச்சியில் தனது பிரசாரத்தைத் தொடங்கும் விஜய், நவ.1 கிருஷ்ணகிரியில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். விஜயைக் காண, தொண்டர்கள் ஆர்வமாக உள்ளனர்.
News September 9, 2025
ஓசூருக்கு வரும் முதலமைச்சர்: 2,000 போலீசார் பாதுகாப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூருக்கு, வருகிற செப்.11. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகை தர உள்ளார். 2 நாள் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வரும் அவர், முதலமைச்சர் வருகையையொட்டி, தர்மபுரி, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களிலிருந்து 2,000 போலீசார் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துச் சீரமைப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.