News September 8, 2025
மக்கள் குறைவிற்கும் நாள் கூட்டத்தில் 375 மனுக்கள்

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் திட்டம் இன்று நடைபெற்றது மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர்தலைமை வகுத்து மனுக்களை பெற்றார். இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக்கோருதல், பட்டா மாறுதல், மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 375 மனுக்கள் பெறப்பட்டது.
Similar News
News September 9, 2025
குற்றாலநாதர் கோவிலுக்குள் வர அனுமதி இல்லை

குற்றாலம் பேரூராட்சிக்குட்பட்ட மெயின் அருவி கரை பகுதியில் பிரசித்தி பெற்ற
திரு குற்றாலநாதர் திருக்கோவிலில் கோவில் நிர்வாகம் சார்பில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஈரத்துணி, கைலி, நைட்டி, அரைக்கால் டவுசர் அணிந்து வர அனுமதி இல்லை மது அருந்திவிட்டு உள்ளே வரக்கூடாது. புகைப்படம் எடுக்கக் கூடாது என திருக்கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
News September 9, 2025
வாசுதேவநல்லூர்: ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியவர் கைது

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் அருகேயுள்ள விஸ்வநாதபேரியை சேர்ந்தவர் பிரேம்குமார். இவர் அப்பகுதியை சேர்ந்த 25 வயது பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி, கர்ப்பமாக்கி விட்டு திருமணத்திற்கு மறுத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் புளியங்குடி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரேம்குமாரை கைது செய்தனர்.
News September 9, 2025
புளியங்குடி புதிய நகராட்சி ஆணையர் பொறுப்பு

புளியங்குடி நகராட்சியில் ஆணையாளராக பணிபுரிந்த சாம் கிங்ஸ்டன் சங்கரன்கோவில் நகராட்சிக்கு மாற்றப்பட்ட நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் , பணிபுரிந்த நாகராஜ் புளியங்குடி நகராட்சி ஆணையாளராக பணி மாறுதல் செய்யப்பட்டார். புதிதாக பொறுப்பு ஏற்ற ஆணையாளரை நகர் மன்ற தலைவர் விஜயா சவுந்திர பாண்டியன், துணை தலைவர் அந்தோணிசாமி, மற்றும் பத்திரம் சாகுல் ஹமீது, அனைத்து கவுன்சிலர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.