News September 8, 2025
பள்ளி வாகனத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்த ஆட்சியர்

தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் கட்டயங்காடு உக்கடை ஊராட்சி நடுவிக்குறிச்சி அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளிக்கு Dr.APJ அப்துல்கலாம் கிராம வளர்ச்சி குழு சார்பில் பள்ளி வாகனத்தினை மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் மற்றும் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமார் அவர்கள் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.
Similar News
News September 10, 2025
தஞ்சை: ரூ.3 லட்சம் மானியம் , தொழிலை தொடங்குங்க!

தஞ்சை மக்களே.. சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு. தமிழ்நாடு அரசு BC/MBC/DNC (ம) சிறுபான்மை வகுப்பை சேர்ந்தவர்களுக்கு ஆடையகம் அமைக்க ரூ.3 லட்சம் மானியம் அறிவித்துள்ளது. இதன் மூலம் தையல் தொழிலில் ஈடுபடுபவர்கள் சுயதொழில் தொடங்கி, வாழ்வில் பொருளாதார மேம்பாடு அடைய பெரும் உதவியாக இத்திட்டம் இருக்கும். இதற்கு விண்ணப்பிக்க தஞ்சை மாவட்ட பிற்படுத்தபட்டோர் நல அலுவலகத்தை அணுகவும். இதை SHARE பண்ணுங்க!
News September 10, 2025
தஞ்சாவூர் கலெக்டர் கொடுத்த அப்டேட்!

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திருவையாறு அரசு இசை கல்லூரியில் பகுதி நேர நாட்டுப்புற கலைப்பயிற்சிக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. வாரந்தோறும் வெள்ளி மற்றும் சனிக்கிழமை பயிற்சி வழங்கப்பட்டு பல்கலைக்கழக சான்றிதழ் வழங்கப்படும். ஓராண்டு கல்வி கட்டணம் 500 ரூபாய். ஆர்வமுள்ள மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு தெரிவித்துள்ளார்.
News September 10, 2025
தஞ்சாவூர்: மாவட்ட ஊர்க்காவல் பணி நியமன ஆணை

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 02.08.2025ம் தேதி நடைப்பெற்ற ஊர்க்காவல் படை தேர்வில் தேர்ச்சி பெற்ற 109 ஆளிநர்களுக்கு பணி நியமன ஆணையை இன்று தஞ்சாவூர் எஸ்பி இராஜாராம் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் ஊர்காவல் படையில் தேர்ச்சிப்பெற்ற ஆளிநர்களுக்கு மக்கள் சேவையில் முழுமையாக ஈடுபடவும், மாவட்ட பாதுகாப்பு பணிகளில் சிறப்பாக பங்கு பெற வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்கள்.