News April 10, 2024
50 ரன்களை கடந்த ரியான் பராக்

குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் அதிரடியாக விளையாடி வரும் ராஜஸ்தான் அணி வீரர் ரியான் பராக் 50 ரன்களை கடந்தார். டாஸ் வென்ற GT முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய RR அணி தற்போது வரை 14 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்துள்ளது. இதில் ரியான் பராக் 35 பந்துகளில் 2 பவுண்டரி 4 சிக்சருடன் 55 ரன்களை விளாசியுள்ளார். இந்தப் போட்டியை எந்த அணி வெல்லும்.?
Similar News
News August 11, 2025
மினிமம் பேலன்ஸை வங்கிகளே முடிவு செய்யலாம்: RBI கவர்னர்

அண்மையில் ICICI வங்கி, மினிமம் பேலன்ஸை ₹50,000-மாக <<17350157>>உயர்த்தியது<<>> வாடிக்கையாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த RBI கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா, மினிமம் பேலன்ஸ் நிர்ணயிப்பது அந்தந்த வங்கிகளின் விருப்பம். இது RBI வரம்புக்கு உட்பட்டதல்ல என்று தெரிவித்துள்ளார். அனைவருக்கும் வங்கிக் கணக்கு அவசியம் என அரசு வலியுறுத்தும் நிலையில், மினிமம் பேலன்ஸை உயர்த்துவது சரியா?
News August 11, 2025
BREAKING: நவம்பர் 1, 2-ல் ஆசிரியர் தகுதித் தேர்வு

ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் தேதியை தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. நவம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெறும் என்றும் அதற்காக இன்று முதல் செப்டம்பர் 8 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வித் தகுதி மற்றும் விண்ணப்பம் சார்ந்த விவரங்களை www.trb.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
News August 11, 2025
உண்மையான நட்பு எங்கே?

நமக்கு தெரிந்தவர்கள் எல்லாம் நம் `நண்பர்கள்’ ஆகிவிடமாட்டார்கள். `நண்பேண்டா’ என டயலாக் பேசினாலும், உண்மையான நட்புணர்வு கொண்ட நண்பர்கள் இக்காலத்தில் குறைவே. நுகர்வு கலாசாரமும், அதற்கான பணநாட்டமும், தொழில்நுட்ப வளர்ச்சியும் மனிதர்களை தங்களுக்குள் நெருங்கிப் பழகவிடாமல் தடுக்கின்றன. அப்படி பழகினாலும் அது மேம்போக்காக, பொழுதை போக்கும் நட்பாகவே உள்ளது. நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்? உங்க best friend யார்?