News September 8, 2025
மயிலாடுதுறை நகராட்சி சார்பில் அறிவிப்பு

மயிலாடுதுறை நகராட்சி பகுதிகளுக்கு வழங்கப்படும் குடிநீரானது கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் முடிகண்டநல்லூரிலிருந்து நீர் கொண்டு வரப்படும் குழாயில் பழுது ஏற்பட்டதன் காரணமாக வருகிற செப்.,10-ம் தேதி ஒருநாள் மட்டும் உள்ளூர் நீர் ஆதாரத்திலிருந்து நீர் வழங்கப்படும் என்பதை நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
Similar News
News September 9, 2025
மயிலாடுதுறை: Canara வங்கியில் வேலை! Apply பண்ணுங்க !

மயிலாடுதுறை இளைஞர்களே பொதுத்துறை வங்கியான கனரா Bank-யில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்படவுள்ளது. டிகிரி முடித்தால் போதும் நீங்களும் Bank வேலைக்கு போகலாம். விருப்பமமுள்ளவர்கள் 06.10.2025 தேதிக்குள்<
News September 9, 2025
மயிலாடுதுறை: மருத்துவமனையில் தூக்கிட்டு தற்கொலை

மயிலாடுதுறை அருகே முருகமங்கலம் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் (62) உடல்நலம் பாதிக்கப்பட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். சிகிச்சையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால் மன உளைச்சலில் நேற்று மருத்துவமனை ஜன்னலில் வேஷ்டியால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மயிலாடுதுறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை மீட்டு வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News September 9, 2025
மயிலாடுதுறையில் 261 பேர் கைது! ஏன் தெரியுமா?

மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட சிறப்பு மதுவேட்டையில் சட்டவிரோதமாக மதுவிற்பனை மற்றும் மதுக்கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது 252 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் தொடர்புடைய 261 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 1,093 லிட்டர் பாண்டி சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 7 இருசக்கர வாகனங்கள் 1 நான்கு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.