News September 8, 2025
நடிகை காஜல் அகர்வால் விபத்தில் சிக்கினாரா?

நடிகை காஜல் அகர்வால் சாலை விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்ததாக காட்டுத் தீ போல் செய்தி பரவியது. அவரது உடல்நிலை குறித்து ரசிகர்களும் சோஷியல் மீடியாவில் கவலை தெரிவித்து வந்தனர். ஆனால், இந்த செய்தி வெறும் வதந்தி எனத் தெரியவந்துள்ளது. பாதுகாப்பாகவும், ஆரோக்கியமுடனும் இருப்பதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். மேலும், சிலமணி நேரத்திற்கு முன்பு இன்ஸ்டாகிராமில் விளம்பர பதிவை காஜல் பகிர்ந்துள்ளார்.
Similar News
News September 9, 2025
உங்கள் உடல் உறுப்புகளை காக்கும் உணவுகள்

நீங்கள் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா? அதற்கு உங்கள் உடல் உறுப்புகளும் ஆரோக்கியமாக இருப்பது அவசியம். ஒவ்வொரு உறுப்பும் வலிமையாக இருக்க அதற்கென்று தனித்தனி உணவுகள் இருக்கிறது. இதனை சரியாக எடுத்துக்கொண்டால் உங்கள் உறுப்புகள் ஆரோக்கியமாக இருக்கும். அது எந்தெந்த உணவுகள் என்பதை தெரிந்துக்கொள்ள போட்டோக்களை SWIPE பண்ணுங்க. இந்த நல்ல தகவலை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News September 9, 2025
ஆசிய கோப்பையில் இந்தியா யாருடன் மோதுகிறது?

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் UAE அணியுடன் மோதுகிறது. குரூப் A-ல் உள்ள இந்தியா செப்.10ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தையும், செப்.14ஆம் தேதி பாகிஸ்தானையும், செப்.19ல் ஓமனையும் எதிர்கொள்கிறது. 2 குரூப்பிலும் புள்ளிகள் அடிப்படையில் தலா 2 அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும். இதில் 8 முறை சாம்பியனான இந்தியா இம்முறையும் கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் நம்புகின்றனர்.
News September 9, 2025
து.ஜனாதிபதி தேர்தலில் நியமன MP-க்கள் வாக்களிக்கலாமா?

நாட்டின் 17-வது துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்னும் சற்று நேரத்தில் துவங்குகிறது. இதில் லோக்சபா, ராஜ்யசபா MP-க்கள் வாக்களிக்க தகுதியானவர்கள். அந்த வகையில், ராஜ்யசபாவில் உள்ள நியமன MP-க்களும் வாக்களிக்கலாம். ஆனால், அவர்களால் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க முடியாது. ராஜ்யசபாவில் 12 நியமன MP-க்களை ஜனாதிபதி, தனது அதிகாரத்துக்கு உட்பட்டு நியமனம் செய்கிறார்.