News April 10, 2024

வாணியம்பாடி: தீயில் கருகி ஆடுகள் பலி

image

வாணியம்பாடி அடுத்த திம்மாம் பேட்டையை சேர்ந்தவர் நாகராஜ். தான் வளர்த்து வரும் ஆடுகளை இன்று மாலை தொழுவத்தில் நாகராஜ் அடைத்துள்ளார். அப்போது திடீரென ஏற்பட்ட மின்விபத்து காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று ஆடுகள் தீயில் கருகி உயிரிழந்தன. ஆடுகளை காப்பாற்ற சென்ற நாகராஜ் தீக்காயம் ஏற்பட்டு  கிருஷ்ணகிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

Similar News

News August 23, 2025

திருப்பத்தூர் மாவட்டத்தில் இரவு ரோந்து விவரம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 23) இரவு 10 மணி முதல் காலை 6:00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உட்கோட்ட போலீசார் அதிகாரியை மேற்கொண்டு தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணிகள் ஈடுபட்டும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் பெயரும் வழங்கப்பட்டுள்ளது.

News August 23, 2025

திருப்பத்தூரில் விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம்

image

திருப்பத்தூரில் உள்ள திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், இன்று (23.08.2025) காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி தலைமையில், விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு விழாக்குழு அமைப்பினர், மூன்று கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், திருப்பத்தூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவலர்கள் பலர் பங்கேற்றனர்.

News August 23, 2025

திருப்பத்தூர்: சிலிண்டர் புக் பண்ண ஈஸியான வழி

image

கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்ய போனில் இருந்து ஒரு SMS அனுப்பினாலே போதும். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். இதுவே பாரத் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பி அலைச்சல் இல்லாமல் சிலிண்டரை புக்கிங் செய்யலாம். இத்தகவலை இல்லத்தரசிகளுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!