News September 8, 2025
SCIENCE: உங்கள் மூளைக்கு வலி தெரியாது. ஏன் தெரியுமா?

உடலில் எங்கு வலித்தாலும், அதை மூளையால் உணரமுடிகிறது. ஆனால், மூளையில் ஏற்படும் வலி நமக்கு தெரிவதே இல்லை. ஏனென்றால், மூளையில் வலியை உணரும் ‘நோசிசெப்டர்’ நரம்புகள் இல்லை. இதனால்தான் ஒருவர் விழித்திருக்கும்போதே மூளை சர்ஜரிகளை செய்யமுடிகிறது. இது உண்மையென்றால் தலைவலி எப்படி ஏற்படுகிறது என நீங்கள் கேட்கலாம். தலை & கழுத்திலுள்ள நரம்புகள் அழுத்தத்திற்கு உள்ளாவதால்தான் தலைவலி ஏற்படுகிறது. SHARE.
Similar News
News September 10, 2025
அதிமுகவில் இருந்து நீக்கம்

செங்கோட்டையனின் ஆதரவாளர்களை கட்சி பொறுப்புகளில் இருந்து EPS அதிரடியாக நீக்கியுள்ளார். ஈரோடு மேற்கு பொறுப்பாளர்கள் செல்வன், அருள் ராமச்சந்திரன், செந்தில் ஆகியோர் அவரவர் வகித்து வந்த பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். மேலும், அத்தாணி பேரூராட்சி முன்னாள் துணை செயலாளர் மருதமுத்து, மாவட்ட IT பிரிவு துணை தலைவர் மணிகண்டனை அடிப்படை உறுப்பினர், பொறுப்புகளில் இருந்தும் EPS நீக்கி உத்தரவிட்டுள்ளார்.
News September 10, 2025
சாதிவாரி கணக்கெடுப்பு… திமுகவை சாடிய அன்புமணி

சமூகநீதியில் அக்கறை இருப்பது போல் திமுக நடிப்பதாக அன்புமணி விமர்சித்துள்ளார். கர்நாடகாவில் 2வது முறையாக சாதிவாரி கணக்கெடுப்பு தொடங்கவுள்ளதை தனது X தள பக்கத்தில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். திமுக ஆட்சியில் இதுவரை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முயற்சிக்காதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். 3 முறை வாய்ப்பு கிடைத்தும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த திமுக அரசு தவறிவிட்டதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
News September 10, 2025
இன்றைய நல்ல நேரம்

▶செப்டம்பர் 10, ஆவணி 25 ▶கிழமை: புதன்கிழமை ▶நல்ல நேரம்: 9:00 AM – 10:00 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 PM – 12:00 PM ▶திதி: த்ரிதியை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶பிறை: தேய்பிறை