News September 8, 2025
சேலம் பயணிகளுக்கு மகிழ்ச்சி செய்தி!

திருமலை திருப்பதி தேவஸ்தான பிரம்மோற்சவ விழா வரும் செப்.24- ஆம் தேதி தொடங்கி அக்.02- ஆம் தேதி வரை திருப்பதியில் நடக்கிறது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்டம் சார்பில் பக்தர்களின் வசதிக்காக மேற்கண்ட நாட்களில் 13 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சேலம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து காலை 08.00, 09.00, 10.00 மணிக்கும், இரவு 09.00, 09.30, 10.30 மணிக்கும் இயக்கப்படுகிறது.
Similar News
News September 9, 2025
சேலம்: மின் துறையில் சூப்பர்வைசர் வேலை!

சேலம் மக்களே மத்திய அரசின் மின்சாரத் துறையில் கள பொறியாளர் & மேற்பார்வையாளர் பணிக்கு 1,543 காலியிடங்கள் உள்ளது. இதற்கு BE / B.Tech / B.Sc படித்தவர்கள் விண்ணபிக்கலாம். சம்பளமாக ரூ.23,000 முதல் ரூ.1,20,000 வரை வழங்கப்படும். <
News September 9, 2025
சேலத்தில் இன்றைய ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

சேலத்தில் இன்று(செப்.9) ’உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் இடங்கள்: ▶️அம்மாபேட்டை மண்டலம் ஐயா சாமி பூங்கா அருகில் உள்ள அபி மஹால் திருமண மண்டபம்▶️ சங்ககிரி ரெட்டியூர் ஸ்ரீ ஆதிசேச திருமண மண்டபம் ▶️எடப்பாடி பச்சையம்மாள் திருமண மண்டபம் ▶️ஆட்டையாம்பட்டி கைலாசம்பாளையம் புதூர் செங்குந்தர் திருமண மண்டபம் ▶️மேச்சேரி எம் எஸ் எஸ் மஹால் மல்லிகுந்தம் ▶️ஆத்தூர் ஸ்ரீ லட்சுமி தாரணி திருமண மண்டபம் மல்லிய கரை
News September 9, 2025
சேலத்தில் வாலிபர் துடிதுடித்து பலி!

சேலம் – நாமக்கல் அருகே சாணாரப்பட்டியைச் சேர்ந்த குணசேகரன் மற்றும் தினேஷ் (19) ஆகியோர் நேற்று(செப்.8) மோட்டார் சைக்கிளில் ஜலகண்டாபுரத்தில் இருந்து நங்கவள்ளி நோக்கி வந்துள்ளனர். காட்டு வளவு அருகே எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இருவரும் படுகாயமடைந்தனர். சாலையில் கிடந்த தினேஷ் மீது மற்றொரு மோட்டார் சைக்கிள் ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.