News September 8, 2025

வேலூர்: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

வேலூர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் இந்த <>லிங்கில்<<>> சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News September 9, 2025

வேலூர்: ரூ.5 லட்சம் இலவச மருத்துவ காப்பீடு

image

வேலூர் மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இதைப்பெற
▶️குடும்ப அட்டை
▶️வருமானச் சான்று
▶️குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை நகல்
உள்ளிட்ட சான்றுகளுடம் வேலூர் ஆட்சியர் அலுவலகம் அல்லது ‘<>உங்களுடன் ஸ்டாலின்<<>>’ முகாமில் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு 1800 425 3993 அழைக்கவும். SHARE பண்ணுங்க

News September 9, 2025

வேலூர்: மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம்

image

வேலூர் மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம், வரும் செப்டம்பர் 11-ம் தேதி, கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள “காயிதே மில்லத்” கூட்டரங்கில் நடைபெற உள்ளது. எனவே, வேலூர் மாவட்டத்திற்குட்பட்ட மாற்றுத்திறனிகள் நலச்சங்க நிர்வாகிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி, இன்று (செப்.9) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News September 9, 2025

வேலூர்: அடிக்கடி மின் துண்டிப்பு: பொதுமக்கள் அவதி

image

வேலூர், காட்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடிக்கடி மின் துண்டிப்பு ஏற்படுவதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். குறிப்பாக, மழைக்காலங்களில் வயதானவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகள் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகப் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். எனவே, இந்தப் பிரச்சினையைத் தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின்வாரியத்திற்குப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!