News September 8, 2025
மக்கள் குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட 287 மனுக்கள்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் மிருணாளினி தலைமையில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கே கலெக்டர் சென்று கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். இதில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 287 மனுக்களை பொதுமக்களிடமிருந்து கலெக்டர் பெற்றுக்கொண்டார்.
Similar News
News September 10, 2025
காவல்துறை அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி

திருச்சி மத்திய மண்டலத்தில் உள்ள காவல் மாவட்டங்களான திருச்சி, திருச்சி மாநகரம், பெரம்பலூர், அரியலூர், கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் சிறப்பு பிரிவுகளில் பணிபுரியும் காவல்துறை அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி இன்று (செப்.,9) பெரம்பலூர் மாவட்டம் நாரணமங்கலம் துப்பாக்கி சுடும் மைதானத்தில் நடைபெற்றது.
News September 9, 2025
பெரம்பலூரில் ஜாக்டோ – ஜியோ சார்பில் போராட்டம்

பெரம்பலூர் மாவட்டத்தில், (செப்டம்பர் 09- 2025 ) நேற்று ஜாக்டோ – ஜியோ சார்பில் பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு வகையான கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்கள். பிறகு அனைவரும் சேர்ந்து கையில் பதாகைகளுடன் பேரணியாக சென்று மனு கொடுக்கப்பட்டது. இதில் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
News September 9, 2025
பெரம்பலூரில் இந்த தேதியை குறித்து வைச்சிக்கோங்க!

பெரம்பலூர்: மாற்றுத்திறனாளிகள் முதியவர்கள் பயன் பெற புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அலிம்கோ நிறுவனத்தால் நடத்தப்படும் மதிப்பீட்டு முகாமில் மாற்றுத்திறனாளி மற்றும் முதியவர்கள் பங்கு பெற்று தேவையான உதவி உபகரணங்களுக்கு விண்ணப்பித்து பயன் பெறலாம். நடைபெறும் நாள் ( 10.09.2025 ) குன்னம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி. முதிவர்கள், மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு தேவையான உதவிகளை பெறலாம். SHARE பண்ணுங்க