News September 8, 2025
விருதுநகரில் அடுத்தடுத்த கொலைகளால் அதிர்ச்சி

விருதுநகர் அருகே குள்லூர்சந்தை பகுதியில் நேற்று இளைஞர் நாகராஜ் என்பவர் முன்விரோதம் காரணமாக கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு அப்பகுதியில் உள்ள வரத்து கால்வாயில் வீசப்பட்டார். இந்நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் குடும்ப பிரச்சினை காரணமாக சகோதரர் மகனை தந்தை மற்றும் சகோதரர் ஆகிய இருவர் கொலை செய்தது பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. ஒரே நாளில் 2 கொலைகள் நடந்ததால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Similar News
News September 10, 2025
சாத்தூர் ரயில்வே கேட் மூடப்படும்

சாத்தூர் ரயில்வே இருப்பு பாதை நாளை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் புதன்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ரயில்வே வழித்தடம் மூடப்படுவதாக ரயில்வே நிறுவாகத்தினர் தெரிவித்துள்ளனர். எனவே பொதுமக்கள் அனைவரும் ரயில்வே பாதையை பயன்படுத்தாமல் மாற்று வழியை பயன்படுத்திக் கொள்ளுமாறு ரயில்வே நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
News September 9, 2025
விருதுநகரில் மதுக்கடைகளை மூட உத்தரவு

இமானுவேல் சேகரன் நினைவு தினம் 11.09.2025 அன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் பரமக்குடி வழித்தடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், எப்.எல்-1, எப்.எல்-2, மற்றும் எப்.எல்-3 மதுபான சில்லறை விற்பனை கடைகள் ஆகியவற்றில் உள்ள மதுக்கூடங்களில் மதுபான விற்பனை ஏதும் செய்யக்கூடாது என மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா உத்தரவிட்டுள்ளார்.
News September 9, 2025
BREAKING விருதுநகர் மக்களை சந்திக்கும் விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் செப்.13 முதல் டிச.20 வரை தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை மேற்கொள்ள உள்ளார். அதன்படி நவ.11 அன்று தென்காசி, விருதுநகர் மாவட்ட மக்களை சந்திக்க உள்ளார். இதற்காக பாதுகாப்பு கோரி காவல்துறையினரிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.