News September 8, 2025
குமரியில் இலவசமாக வக்கீல் வேண்டுமா?

கன்னியாகுமரி மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
▶️ கன்னியாகுமரி மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 04652-291744
▶️ தமிழ்நாடு அவசர உதவி: 04563-260310
▶️ Toll Free 1800 4252 441
▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
Similar News
News September 9, 2025
குமரியில் காற்றாலைகளில் மின் உற்பத்தி அதிகரிப்பு!

குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவக்காற்று வேகமாக வீசி வருகிறது. இதன் காரணமாக குமாரபுரம், ஆரல்வாய்மொழி, காவல்கிணறு, செண்பகராமன் புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள காற்றாலைகளில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. 230 கிலோ வாட் மின் உற்பத்தி செய்யும் காற்றாலைகளில் 220 மெகாவாட் வரை மின் உற்பத்தி நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
News September 9, 2025
BREAKING குமரிக்கு வருகை தரும் விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் செப்.13 முதல் டிச.20 வரை தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை மேற்கொள்ள உள்ளார். அதன்படி செப்.13 அன்று திருச்சியில் தொடங்கி அக்.10 அன்று நெல்லை, குமரி, திருநெல்வேலியில் மக்களை சந்திக்க உள்ளார். இதற்காக பாதுகாப்பு கோரி காவல்துறையினரிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.
News September 9, 2025
குமரியில் 14 சப்-இன்ஸ்பெக்டர்கள் அதிரடி இடமாற்றம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 14 சப்-இன்ஸ்பெக்டர்களை வெவ்வேறு போலீஸ் ஸ்டேஷன்களுக்கு இடமாற்றம் செய்து மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவிட்டார். அதில் பளுகல், களியக்காவிளை, இரணியல், மணவாளக்குறிச்சி, ஆரல்வாய்மொழி, ராஜாக்கமங்கலம், வெள்ளிச்சந்தை, கீரிப்பாறை, புதுக்கடை, கோட்டார், தெந்தாமரைக்குளம், கருங்கல் உட்பட 14 போலீஸ் ஸ்டேஷன்களில் பணியாற்றிய 14 சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.