News September 8, 2025
தென்காசியில் இலவசமாக வக்கீல் வேண்டுமா?

தென்காசி மாவட்ட மக்களே நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
▶️ தென்காசி மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 0462-2572689
▶️ தமிழ்நாடு அவசர உதவி: 04563-260310
▶️ Toll Free 1800 4252 441
▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
Similar News
News September 9, 2025
குற்றாலநாதர் கோவிலுக்குள் வர அனுமதி இல்லை

குற்றாலம் பேரூராட்சிக்குட்பட்ட மெயின் அருவி கரை பகுதியில் பிரசித்தி பெற்ற
திரு குற்றாலநாதர் திருக்கோவிலில் கோவில் நிர்வாகம் சார்பில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஈரத்துணி, கைலி, நைட்டி, அரைக்கால் டவுசர் அணிந்து வர அனுமதி இல்லை மது அருந்திவிட்டு உள்ளே வரக்கூடாது. புகைப்படம் எடுக்கக் கூடாது என திருக்கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
News September 9, 2025
வாசுதேவநல்லூர்: ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியவர் கைது

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் அருகேயுள்ள விஸ்வநாதபேரியை சேர்ந்தவர் பிரேம்குமார். இவர் அப்பகுதியை சேர்ந்த 25 வயது பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி, கர்ப்பமாக்கி விட்டு திருமணத்திற்கு மறுத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் புளியங்குடி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரேம்குமாரை கைது செய்தனர்.
News September 9, 2025
புளியங்குடி புதிய நகராட்சி ஆணையர் பொறுப்பு

புளியங்குடி நகராட்சியில் ஆணையாளராக பணிபுரிந்த சாம் கிங்ஸ்டன் சங்கரன்கோவில் நகராட்சிக்கு மாற்றப்பட்ட நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் , பணிபுரிந்த நாகராஜ் புளியங்குடி நகராட்சி ஆணையாளராக பணி மாறுதல் செய்யப்பட்டார். புதிதாக பொறுப்பு ஏற்ற ஆணையாளரை நகர் மன்ற தலைவர் விஜயா சவுந்திர பாண்டியன், துணை தலைவர் அந்தோணிசாமி, மற்றும் பத்திரம் சாகுல் ஹமீது, அனைத்து கவுன்சிலர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.