News September 8, 2025
ராமநாதபுரம் பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.
இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
▶️ராமநாதபுர மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 04567-230444
▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
▶️ Toll Free 1800 4252 441
▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
Similar News
News September 9, 2025
BREAKING இராமநாதபுரம் வரும் விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் செப்.13 முதல் டிச.20 வரை தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை மேற்கொள்ள உள்ளார். அதன்படி நவ.29 அன்று சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட மக்களை சந்திக்க உள்ளார். இதற்காக பாதுகாப்பு கோரி காவல்துறையினரிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.
News September 9, 2025
பரமக்குடிக்கு துணை முதல்வர் வருகை; MLA அறிவிப்பு

பரமக்குடியில் வருகிற செப்.11 இமானுவேல் சேகரனின் குருபூஜை விழா நடைபெற இருக்கிறது. இதற்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்த உள்ளனர். எனவே உதயநிதி ஸ்டாலினை வரவேற்கும் பொருட்டு பிளக்ஸ் வைப்பதை முற்றிலும் தவிர்க்கும் மாறும் திமுக இருவண்ண கொடிகளை கொண்டு வரவேற்பு அளிக்க வேண்டும் என எம்எல்ஏ காதர் பாட்சா முத்துராமலிங்கம் கேட்டுக் கொண்டுள்ளார்.
News September 9, 2025
ராமநாதபுரம் மாவட்டத்தில் மதுபான கடைகள் மூடல்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அமைந்துள்ள தியாகி இமானுவேல் சேகரனாரின் குருபூஜை விழா 11ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு நாளை மறுதினம் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து மதுபான கடைகளிலும் விற்பனை கிடையாது என ஆட்சியர் அறிவித்துள்ளார். கள்ளச் சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை.